உயிர்த்த ஞாயிறு சம்பவத்தை வைத்து அரசியல் நடாத்துவது கேவலம் : செல்வம் எம்.பி

Selvam Adaikalanathan Easter Attack Sri Lanka
By Vanan Sep 09, 2023 10:20 PM GMT
Report

தமிழினப் படுகொலை தொடர்பாக குரல்கொடுக்காத எதிர்க்கட்சித்தலைவர், கொழும்பு பேராயர் கர்தினால் மற்றும் ஏனையவர்கள் உயிர்த்த ஞாயிறு சம்பவத்தை வைத்துக்கொண்டு அரசியல் நடாத்துவது உண்மையிலே கேவலமான விடயமாகும் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நேற்று(9) வவுனியாவில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம்

“உயிர்த்த ஞாயிறு தொடர்பாக சனல் 4 வெளியிட்ட தகவலானது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்ற நிலை காணப்படுகின்றது.

சனல் 4 ஆவணத்தால் அதிரும் இலங்கை - கோட்டாபய வெளியிட்ட விசேட அறிக்கை

சனல் 4 ஆவணத்தால் அதிரும் இலங்கை - கோட்டாபய வெளியிட்ட விசேட அறிக்கை

உயிர்த்த ஞாயிறு சம்பவத்தை வைத்து அரசியல் நடாத்துவது கேவலம் : செல்வம் எம்.பி | Tamil Genocide Vs Easter Attack

தென்னிலங்கையில் உள்ளவர்களும், கர்தினாலும் இவ் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையினை வைக்கின்றனர்.

நாங்களும் இது தொடர்பாக சர்வதேச விசாரணை மற்றும் சர்வதேச நீதிமன்றத்திற்கு இதனை கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்வதுடன், விரைவாக இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம்.

அதிபர் தேர்தலை முன்னிறுத்தியே இவ்விடயமானது தற்போது பேசுபொருளாக இருப்பதாக நான் கருதுகிறேன்.

தமிழின படுகொலை

மகிந்த ராஜபக்சவின் குடும்ப ஆட்சி காலத்திலே தமிழ் மக்களினை படுகொலை செய்ததுடன் மனித உரிமை மீறல்களையும் மேற்கொண்டிருந்தனர்.

உயிர்த்த ஞாயிறு சம்பவத்தை வைத்து அரசியல் நடாத்துவது கேவலம் : செல்வம் எம்.பி | Tamil Genocide Vs Easter Attack

சனல் 4 வெளியிட்ட ஆவணம் : கேள்விகளும் சந்தேகங்களும்

சனல் 4 வெளியிட்ட ஆவணம் : கேள்விகளும் சந்தேகங்களும்

இது தொடர்பாக ஐ.நா சபை கண்டனம் தெரிவித்ததுடன் இது தொடர்பான பூரண விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசிடம் கோரிக்கையினையும் முன்வைத்திருந்தனர்.

இவ் விடயம் தொடர்பாக கடந்த காலங்களிலே சர்வதேச விசாரணையினை மேற்கொள்ள வேண்டும் அல்லது சர்வதேச நீதித்துறையை சார்ந்தவர்கள், சர்வதேச வழக்கறிஞர்களை அழைத்து விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தோம்.

ஆனால் இச்சந்தர்ப்பத்தில் குரல்கொடுக்காத எதிர்க்கட்சித்தலைவர், கர்தினால் மற்றும் ஏனையவர்கள் உயிர்த்த ஞாயிறு சம்பவத்தை வைத்துக்கொண்டு அரசியல் நடாத்துவது உண்மையிலே கேவலமான விடயமாகும்.

கர்தினால் உட்பட அனைவரும் மனச்சாட்சியுடன் இந்நாட்டில் புரையோடிப்போய்யுள்ள இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் என எண்ணி இருந்திருந்தால், கடந்த காலங்களிலே மகிந்த ராஜபக்சவின் குடும்பம் மேற்கொண்ட அட்டூழியங்கள், மனித உரிமை மீறல்களிற்கு எதிராக குரல்கொடுத்திருந்திருக்கலாம்” என தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், London, United Kingdom

03 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், உரும்பிராய்

05 Oct, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025