தமிழரின் காணி அபகரிப்பு: மொட்டு கட்சி அமைப்பாளர் கொலை மிரட்டல்

Sri Lanka Police Vavuniya Sri Lanka Podujana Peramuna
By Sumithiran Oct 09, 2025 07:12 PM GMT
Report

வவுனியா திரிவைத்தகுளம் காணி ஆக்கிரமிப்பு தொடர்பில் வெளிப்படுத்தியமைக்காக மொட்டுக் கட்சியின் அமைப்பாளரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ்.தவபாலன் வவுனியா சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

வவுனியா, கண்டி வீதியில் அமைந்துள்ள சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்தில் இன்று (09.10) முறைப்பாடு செய்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

போகஸ்வேவ குடியேற்றவாசிகளால் ஆக்கிரமிப்பு

வெடிவைத்தகல் கிராம அலுவலர் பிரிவில் திரிவைத்தகுளம் என்னும் கிராமம் போகஸ்வேவ குடியேற்றவாசிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது. அந்த விடயங்களை நாங்கள் கடந்த யூலை மாதம் கள விஜயம் செய்து ஊடகங்கள் வாயிலாக வெளிக் கொண்டு வந்திருந்தோம். காணி உரிமையாளர்கள ஒலுமடுவில் இருக்கிறார்கள். அவர்கள் காணியை வெளியாக்கிய போது அவர்கள் மீது வனஇலாகா திணைக்களம் வழக்கு தாக்கல் செய்து மூன்று வருடங்கள் வழக்கு இடம்பெற்று தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.

தமிழரின் காணி அபகரிப்பு: மொட்டு கட்சி அமைப்பாளர் கொலை மிரட்டல் | Tamil Land Grabbing Death Threats Bud Party

காடுகள் அழிக்கப்பட்டு அந்த இடத்தில் விவசாயம்

இந்தநிலையில் தான் போகஸ்வேவ குடியேற்றவாசிகளால் குறிப்பாக மகிந்தவின் மொட்டுக் கட்சியின் அமைப்பாளராக இருக்கின்ற பிமல் தர்மராஜா குழுவினரால் டோசர் மூலம் காடுகள் அழிக்கப்பட்டு அந்த இடத்தில் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விடயங்களை ஊடகங்கள் மூலம் நாம் வெளியில் கொண்டு வந்திருந்தோம்.

தமிழரின் காணி அபகரிப்பு: மொட்டு கட்சி அமைப்பாளர் கொலை மிரட்டல் | Tamil Land Grabbing Death Threats Bud Party

கடந்த மாதம் 30 ஆம் திகதி அந்த இடங்களைப் பார்வையிட வன்னியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் சென்றிருந்தனர். அந்த இடத்திற்கு வருகை தந்த காணியை ஆககிரமித்துள்ள பிமல் தர்மராஜா போன்ற குழுவினர் அங்கு வருகை தந்தவர்களை பார்த்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர்.

என்னுடைய பெயரினையும், பிரதேச சபை உறுப்பினர் தமிழ் செல்வன் பெயரையும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பெயரையும் குறிப்பிட்டு அவர்கள் இங்கு இருக்கிறர்களா? அவர்களை வெட்டுவதற்காக, அவர்களை கொலை செய்ய தான் வந்தோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கத்திற்கு முன்னால் தெரிவித்திருந்தார்கள். அச்சுறுத்துகின்ற மற்றும் தெரிவித்த கருத்துக்கள் எல்லாம் கணொளிகளாக உள்ளன.

வவுனியா சிரேஸ்ட காவல்துறை அலுவலகத்தில் முறைப்பாடு

 அந்தப்பகுதி போகஸ்வேவ காவல் நிலையத்திற்கு உட்பட்டதாக இருந்தாலும் அந்த அச்சுறுத்தலுக்கு எதிராக வவுனியா சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்திற்கு வருகை தந்து முறைப்பாட்டை வழங்கியுள்ளோம். அவர்கள் நேரடியாக போகஸ்வேவ காவல் நிலையம் ஊடாக இதனை அணுகுவவதற்காக இநத விசாரணையை மேற்கொள்ளுமாறு அந்த அதிகாரிக்கு சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகh அறிவுறுத்தியுள்ளார். நாங்கள வாக்கு மூலம் வழங்கியுள்ளோம்.

தமிழரின் காணி அபகரிப்பு: மொட்டு கட்சி அமைப்பாளர் கொலை மிரட்டல் | Tamil Land Grabbing Death Threats Bud Party

எமது நிலங்களை அரச திணைக்களங்களுடன் இணைந்து ஆக்கிரமித்து 210 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்துள்ளார்கள். காணி உரிமையாளர்கள் போவதற்கு தடை போடும் திணைக்களங்கள் குடியேற்ற சிங்களவர்கள் துப்பரவு செய்து அபகரிக்கும் போது பேசாமல் இருக்கிறார்கள். இனிவரும் காலங்களில் எவ்வாறான அச்சுறுத்தல் வந்தாலும் திரிவைத்த குளம் தமிழர் காணிகளை மீட்க தொடர்ந்து போராடுவோம் எனத் தெரிவித்தார்.

காற்றாலை விவகாரம்: யாழ் - வவுனியா பல்கலைக்கழகங்களுக்கு எழுந்துள்ள சவால்

காற்றாலை விவகாரம்: யாழ் - வவுனியா பல்கலைக்கழகங்களுக்கு எழுந்துள்ள சவால்

வெடுக்குநாறி ஆலயநிர்வாகத்தினர் TID யில் முன்னிலை

வெடுக்குநாறி ஆலயநிர்வாகத்தினர் TID யில் முன்னிலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


 

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025