டிக்கோயா இரட்டைக் கொலை: சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் அதிரடியாக கைது
டிக்கோயா நகரில் இடம்பெற்ற வயோதிப தம்பதியின் இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், தப்பிச் சென்று நீண்டகாலமாக தலைமறைவாகியிருந்த நிலையில் இன்று (02.10.2026) யாழ்ப்பாணத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக பொகவந்தலாவை பகுதியில் பொதுமக்களின் உதவியுடன் கைது செய்யப்பட்ட இவரை, கடந்த ஜூன் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து கண்டி பல்லேகல சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த இவர், திடீர் உடல்நலக் குறைவு காரணமாகக் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சிறைச்சாலை பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்றிருந்தார்.
தீவிர தேடுதல் நடவடிக்கை
தப்பிச் சென்ற சந்தேகநபரைத் தேடி காவல்துறையினரும் சிறைச்சாலை அதிகாரிகளும் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தனர்.

இந்தநிலையிலேயே, தங்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாண குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் யாழ்ப்பாணத்திலுள்ள கடையொன்றுக்கு அருகில் நின்றிருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |