இப்படி இழித்துக்கொண்டு நின்று யாருக்கு என்ன பயன்
Sonnalum Kuttram
By Independent Writer
2 years ago
பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்ற வார்த்தை அதிகம் பேச கேட்டிருக்கிறோம்.
அந்த நிலைமையில் தான் இன்று நாம் இருக்கிறோம்.
அப்படி என்ன பெரிதாய் நடந்ததென்று பார்க்கிறீர்களா?
உந்த தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று எக்காளமிட்டுக்கொள்ளும் அரசியல்வாதிகள் தமிழ் மக்களிடம் பழியையும் தமக்குள்ளாக பாரமான விடயங்களையும் வைத்துக்கொள்கிறார்கள்.
தமிழ் மக்களுக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அதில் ஒன்றுபடாமல் கீரியும் பாம்பும் போல நின்று வீதியில் சக்காளத்தி சண்டை போட்டுக்கொள்ளும் இந்த அரசியல் வியாதிகள்,
இன்று ஒற்றுமையாக வரிந்துகட்டிக்கொண்டு அமெரிக்காவிடம் கை கட்டிக்கொண்டு புதினங்காட்டிக்கொண்டு திரிகிறார்கள்.
யாருக்கு என்ன பயன்
ஒரு கடிதம் எழுத ஒன்றுபடாதவர்கள் இப்படி இழித்துக்கொண்டு நின்று யாருக்கு என்ன பிரியோசனம்.
தமிழ் மக்கள் நாங்கள் இழிச்சவாயர்கள்தானே உங்கள் பார்வையில்
