பட்டலந்தை போல வட கிழக்கில் சித்திரவதை முகாம்கள் : தமிழருக்காக நீதி கோரும் சிறிநேசன்
“பட்டலந்தை சித்திரவதை முகாம் 37 வருடங்களுக்கு பின்னர் வெளிவந்துள்ளது எனவே இவ்வாறு வடக்கு கிழக்கில் இயங்கிய பல முகாம்கள் தமிழர்கள் படுகொலை மற்றும் சித்திரவதைகள் இடம்பெற்றுள்ளது.
தமிழ் மக்கள் என்பற்காக அதனை மூடிமறைத்து விட்டு சிங்கள இளைஞர்கள் உங்கள் கட்சியினர் பாதிக்கப்பட்டார்கள் என மட்டும் கொண்டுவந்திருப்பது கேள்விகுறியாக உள்ளது.
ஆகவே தமிழ்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தேசிய மக்கள் சக்தி வெளிக் கொண்டுவரவேண்டும்” என நாடாளுமன்ற உறப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
அத்தோடு, தங்கள் தோழர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரம் நீதியை தேடாமல் சித்திரவதை முகாம்களில் தமிழர்களுக்கு இடம்பெற்ற அநியாயங்களை வெளிக் கொண்டுவரவேண்டும்“ என ஞானமுத்து சிறிநேசன் வலியுறுத்தினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்