குறைந்த கட்டணத்தில் மலேசியாவிற்கு நேரடி விமான சேவை: வெளியான நற்செய்தி
இலங்கையின் முதல் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான சர்வதேச விமான நிறுவனமான ஃபிட்ஸ்எயார், மலேசியாவின் கோலாலம்பூருக்கு நேரடி விமானங்களை அறிமுகப்படுத்தவுள்ளது.
இலங்கையின் முன்னணி குறைந்த கட்டண விமான நிறுவனமாக அதன் நிலையை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கோலாலம்பூருக்கான விமானங்கள் ஏப்ரல் 4, 2025 அன்று நான்கு (04) வாராந்திர சேவைகளுடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மலிவு விலை
சேவையின் அறிமுகத்தை குறிப்பதாற்காக ஃபிட்ஸ்எயார் நிறுவனம், கோலாலம்பூருக்குத் செல்வதற்கான பற்றுச்சீட்டுக்கு ரூ. 65,300 சிறப்பு அறிமுகக் கட்டணத்தை வழங்கியுள்ளது.
அதன்போது, 20 கிலோகிராம் நிறையுடைய பொருட்கள் மற்றும் 7 கிலோகிராம் நிறையுடைய கை பொருட்களையும் உள்ளடக்கி இந்த சிறிப்பு கட்டணம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் புதிய சேவையின் மூலம், ஃபிட்ஸ்எயார் தனது வலையமைப்பை தொடர்ந்து விரிவுபடுத்தி, அதன் பயணிகளுக்கு மிகவும் மலிவு விலையில், தொந்தரவு இல்லாத பயண விருப்பங்களை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஏனைய நாடுகள்
மேலும் குறித்த புதிய பாதை வர்த்தகம், சுற்றுலா மற்றும் பயணத்திற்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிர்பாரக்கப்படுகிறது.
விமான நிறுவனத்தின் வளர்ந்து வரும் வலையமைப்பில் மாலே, துபாய், டாக்கா மற்றும் சென்னை போன்ற இடங்கள் அடங்குவதுடன், இவை அனைத்திற்கும் கொழும்பில் உள்ள அதன் முக்கிய மையத்தின் மூலம் தடையற்ற இணைப்புகளை நிறுவனம் வழங்கி வருவதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில், விமான சேவைகள் தொடர்பான மேலதிக தகவல் மற்றும் முன்பதிவுகளுக்கு, www.fitsair.com என்ற இணைப்பை அணுகலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்