நினைவேந்தல் நிகழ்வுக்கு மறுப்பு: சபையிலிருந்து உறுப்பினர்கள் வெளிநடப்பு
தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுக்கு செல்வதற்கு அனுமதிக்காமையினால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (26) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் (Jaffna) வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று (26) இடம்பெற்றுள்ளது.
தியாக தீபம்
இதன்போது, நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் நடைபெறும் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ள ஏதுவாக சபை அமர்வுகளை மதியத்திற்கு ஒத்திவைக்குமாறு உறுப்பினர்கள் சிலர் தவிசாளரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
உறுப்பினர்களின் கோரிக்கையை தவிசாளர் , சபையில் உள்ள ஏனைய உறுப்பினர்களிடம் கூறிய போது சில உறுப்பினர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
தவிசாளர்
இதனால், தவிசாளர் சபையை ஒத்திவைக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஐந்து உறுப்பினர்கள் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நான்கு உறுப்பினர்கள் அடங்கலாக ஒன்பது உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
இதையடுத்து, நல்லூரில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் அவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
