மன்னராட்சி தூக்கி எறியப்பட்ட நாள் : தவெகவின் ஆதவ் ஆர்ஜுனா புகழாரம்
60 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டில் புரட்சி ஏற்பட்டுள்ளதாகவும் மன்னராட்சி தூக்கி எறியப்பட்ட நாள் இன்று எனவும் தவெகவின் வில்லிவாக்கம் வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
தமிழக சட்ட மன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 100க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர் சந்திப்பின் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, 60 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டில் புரட்சி ஏற்பட்டுள்ளது. இளைஞர்களும் பெண்களும் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டியுள்ளனர்.
புதிய ஆட்சி
ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. விஜயின் பிரசாரத்தை முடக்கினார்கள், அவதூறு பரப்பினார்கள். வாக்குக்கு பணம் கொடுக்காமல் பெற்ற வெற்றி இது.

சாதி அரசியல், மத அரசியலை தூக்கி எறிந்த தேர்தல். மன்னராட்சி தூக்கி எறியப்பட்ட நாள். புதிய ஆட்சி இளைஞர்கள், மக்களுக்கானதாக இருக்கும். இந்த வெற்றி தமிழக இளைஞர்கள், பெண்கள் அனைவருக்கும் சொந்தம்“ என தெரிவித்தார்.
இதேவேளை தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வரலாற்று வெற்றி பெற்றுள்ள நடிகர் விஜய்க்கு நடிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 4 மணி நேரம் முன்