எதிர்கட்சிகளின் தொடர் குற்றச்சாட்டு...! கரூர் செல்லவுள்ள முதல்வர் விஜய்
இந்தியாவின் கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் சந்திப்பதற்காக முதலமைச்சர் விஜய் கரூர் செல்லவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த வருடம் செப்டம்பரில் நடைபெற்ற பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
பாதிக்கப்பட்டவர்களை அழைத்து மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் சந்தித்து முதலமைச்சர் விஜய் ஆறுதல் தெரிவித்தார்.
நலத்திட்ட உதவிகள்
அத்தோடு சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் நேரில் வந்து பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதாக உறுதியளித்திருந்தார்.
தற்போது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. ஆட்சி அமைத்துள்ளது.

ஆட்சி பொறுப்பேற்று ஒன்றரை மாதங்களுக்கு மேலாகியும் முதல்வர் விஜய் அங்கு செல்லவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தனர்.
இந்தநிலையில், முதல்வர் விஜய் எதிர்வரும் 10 ஆம் 11 ஆம் திகதிகளில் கரூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் அங்கு நடைபெறும் அரச நிகழ்வில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |