சர்வதேச வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் தினம் - போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த தமிழரசுக்கட்சி
வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு தமிழரசுக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளைய தினம் (30) சர்வதேச வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் தினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு தமிழரசுக்கட்சி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை, போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளது. முன்னெடுக்கப்படவுள்ள வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுமட்டுமன்றி வடக்கிலும் கிழக்கிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறவுகளுக்கு குரல்கொடுப்போம்

இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியத்தினை ஆதரிக்கும் மற்றும் வலிந்து காணாமல்போன உறவுகளுக்கு குரல்கொடுக்கும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா, இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் கி.சேயோன் ஆகியோர் இந்த இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 22 மணி நேரம் முன்