கனேடிய தூதுவரை சந்தித்த இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள்
இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக்வோல்ஸுக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் இளம் அரசியல் உறுப்பினர்களுக்குமிடையேயான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது நேற்றையதினம்(16) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது நடைமுறை அரசியல் விடயங்கள் குறித்தும், விசேடமாக தமிழ் மக்கள் தற்போது எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் சம்பந்தமாகவும், தற்போது கனடா அரசினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும், வடக்கு கிழக்கில் இன்னும் பல அபிவிருத்தி திட்டங்களை, எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.
தமிழ்க் கட்சிகள்
அத்துடன், தற்போதைய அரசினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்களால் தமிழ் மக்கள் எவ்வாறான சவால்களை எதிர்கொள்கின்றார்கள் போன்ற விடயங்களும் ஆராயப்பட்டுள்ளதுடன் இது தவிர, எதிர்வருகின்ற உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்(Selvam Adaikalanathan) நேற்று(15) ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்துக்காக தாம் எந்தவித விட்டுக் கொடுப்புகளை மேற்கொள்வதற்கு தயாராக உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
