யாழ். நல்லூர் ஆலயத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்ற வருடப்பிறப்பு வழிபாடு
நாடளாவிய ரீதியில் சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ வருடப் பிறப்பு உற்சவம் இன்று (14) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.
புத்தாண்டு சிறப்பு வழிபாடுகளில் பெருமளவு அடியார்கள் கலந்துகொண்டு நல்லூர் கந்தனின் அருளை பெற்றனர்.
திருகோணமலை
திருகோணமலை வாழ் மக்கள் பக்திப் பெருக்குடன் புத்தாண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

புத்தாண்டை முன்னிட்டு, திருகோணமலை ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் அதிகாலை முதல் விசேட அபிஷேக மற்றும் ஆராதனை பூசைகள் நடைபெற்றன.
ஆலய வழிபாடுகளைத் தொடர்ந்து, இல்லங்களில் மங்களகரமான நேரத்தில் 'கைவிசேஷம்' பரிமாறிக் கொள்ளப்பட்டது.
மேலும், திருகோணமலையின் பல பகுதிகளில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும், கலை நிகழ்வுகளும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் அங்கமாக உற்சாகத்துடன் நடைபெற்று வருகின்றன.
பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், மக்கள் மிகுந்த நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் இந்தப் புத்தாண்டை வரவேற்று வருவது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |