13 ஆம் திருத்தத்திற்கு அழுத்தம் கொடுப்பதிலிருந்து தமிழ் கட்சிகள் நழுவல்? புதிய வரைபை தயார்படுத்தியுள்ளதாக அறிவிப்பு

Tamil parties slip 13th amendment
By Vanan Dec 23, 2021 12:25 AM GMT
Report

தமிழ் பேசும் தரப்புக்களின் கட்சிகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைக்கவுள்ள கடிதத்தின் பொருள் மாற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருான எம்.ஏ. சுமந்திரன் (M. A. Sumanthiran) விசேட அறிக்கை ஒன்றின் ஊடாக கூறியுள்ளார்.

எனினும் ரெலோ தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சியை தாமே மேற்கொண்டது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு அறிக்கையை வெளியிடுவதன் மூலம் முயற்சிப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழ் பேசும் தரப்புக்களின் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் ஆவணம் ஒன்றை இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்கு நேற்றுமுன்தினம் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டது.

13 ஆவது திருத்தச் சட்டம் உள்ளிட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகளாக அடையாளம் காணப்பட்ட 8 விடயங்கள் தொடர்பில் தலைவர்களுக்கு இடையில் இணக்கம் எட்டப்பட்டதுடன், அதனை புதிய ஆவணமாக தொகுத்து தயாரிக்கும் பணிகள் சுமந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

ரெலோவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் பேச்சுக்களின் போது, தமிழ் கட்சிகள் தமது கோரிக்கையாக தயார் செய்த ஆவணத்தின் தலைப்பு '13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த கோருதல்' என முன்னர் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் தமிழ் பேசும் மக்களின் இனப்பிரச்சினைக்கு 13 ஆவது திருத்தம் தீர்வாகாது எனவும் அதனையும் தாண்டிய அதிகார பகிர்வு அவசியம் எனவும் பொதுவெளிகளில் கருத்து வெளியிட்டிருந்த எம்.ஏ.சுமந்திரன், ரெலோவின் முயற்சியையும் பொது வெளியில் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதன்பின்னணியில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் எட்டுப் பக்க ஆவணங்களுடன் திடீரென பங்குகொண்ட எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட குழுவினர், தமது முன்மொழிவுகளை சமர்ப்பித்திருந்தனர்.

இதன்போது 13 ஆவது திருத்தத்தை தலைப்பில் இட்டமை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழரசு கட்சியினர் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

இதன்பின்னணியில் இந்தியப் பிரதமரிடம் கையளிக்கப்படுவதற்கென தயாரிக்கப்படும் ஆவணமானது, “தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்” என தலைப்பிடப்பட்டுள்ளதாக எம்.ஏ. சுமந்திரன் அறிக்கையொன்றின் ஊடாக கூறியுள்ளார்.

புதிய வரைவு தயாரிக்கப்பட்ட போது அதன் நோக்கம், பொருள் என்பன மாற்றப்பட்டே புதிய ஆவணம் தயார் செய்யப்பட்டுள்ளது என எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஆவணமும் தற்போது ஒரு வரைபாகவே உள்ளதுடன் இந்த வரைபை அல்லது அதன் திருத்ததை கட்சிகள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே இது கைச்சாத்திடப்படும் என அவர் கூறினார்.

சில ஊடகங்கள் தொடர்ந்தும் தவறான தலைப்பில் இது குறித்த செய்திகளை வெளியிடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர். எம்.ஏ. சுமந்திரன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஏனைய அனைத்து கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டை எட்ட வேண்டும் என்ற நோக்குடன் அமைதிகாக்கும் நேரத்தில் எம்.ஏ.சுமந்திரன் மாத்திரம் முந்திக்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இதன்மூலம் இந்தப் பேச்சுவார்த்தை முயற்சி மற்றும் அதில் தீர்மானம் மேற்கொள்ளும் அதிகாரம் தம்மிடம் இருப்பது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த எம்.ஏ.சுமந்திரன் முயற்சிப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020