ஐ.நா மனித உரிமை பேரவைக்கு கடிதம்! இன்று அவசரமாக கூடுகிறது தமிழ்க்கட்சிகள்
Jaffna
UN
Human Rights
Suresh Premachandran
SriLanka
EPRLF
Tamil Political Party
By Chanakyan
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு, கடிதம் ஒன்றை அனுப்புவதற்காக, தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் கட்சிகள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் கூடி ஆராயவுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் (Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.
இன்று மாலை 4 மணியளவில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
அதேநேரம், 'ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வும், - தேசிய பிராந்திய சர்வதேச நிலவரங்களும்' என்ற தலைப்பில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அரசியல் ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் கூட்டமொன்றும் இன்று முற்பகல் இடம்பெறவுள்ளது.
