மாபெரும் கதவடைப்பு போராட்டத்திற்கு தயாராகும் தமிழர் தாயகம் - விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
வருகின்ற ஏப்ரல் 25 ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் முழுமையான கதவடைப்பு போராட்டத்தை நடத்துவதற்கு தமிழ்க் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளது.
பௌத்த மயமாக்கலுக்கு எதிராகவும், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்ற எடுக்கும் முயற்சிகளுக்கு எதிராகவும் குறித்த கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இன்றையதினம், ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் இல்லத்தில் நடைபெற்ற தமிழ் கட்சிகளுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போராட்டம்

வருகின்ற 25 ஆம் திகதி பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளது.
இந்தநிலையில், அன்றைய தினம் வடக்கு, கிழக்கு தழுவிய கதவடைப்பை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
இந்த சந்திப்பில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரே்ஷ் பிரேமச்சந்திரன்,ஜனநாயக போராளிகள் கட்சியினர், தமிழ் தேசிய கட்சியினர் என பல்வேறு கட்சிகளும் கலந்து கொண்டன.