தமிழரது கால்நடைகளை துப்பாக்கியால் சுடும் பெரும்பான்மையினத்தவர் - இன்றும் தாக்குதல் ( படங்கள்)
மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் உள்ள கால்நடைகள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் இடம் பெற்றுவருகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை காணிகளை அபகரித்து சிங்கள குடியேற்றம் ஒன்றை உருவாக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
மட்டக்களப்பில் உள்ள தமிழ் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்குடன் பால் தரும் பசுக்களை திட்டமிட்ட வகையில் படுகொலை செய்யும் நடவடிக்கைகளும் நடந்தேறி வருகின்றன.
சுட்டுக்கொள்ளப்பட்ட மாடு
அந்தவகையில் கடந்த 25ம் திகதி வயிற்றில் கன்றுடன் மாடு ஒன்று சுட்டுக்கொல்லப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு கரடியநாறு காவல்துறையினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்றும் தாக்குதல்
இந்த நிலையில் இன்று பண்ணையாளர் ஒருவரது மாடு ஒன்று காணாமல் போயுள்ளதால் அதை தேடி அழைந்த நிலையில் துப்பாக்கிசூட்டு காயங்களுடன் காடு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக நாளைய தினம் கரடியனாறு காவல்துறையினருக்கு முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
