தமிழ் கட்சிகளின் செயல் : தமிழ் மக்கள் பொதுச்சபை கடும் அதிருப்தி

Sri Lankan Tamils Sri lanka election 2024 Parliament Election 2024
By Jaso Oct 06, 2024 05:14 PM GMT
Report

தமிழ் கட்சிகளின் செயல் "தேசமாய் ஈழத்தமிழர்களை ஒன்றுதிரட்டுதல்' என்ற உன்னத குறிக்கோளுக்கு முற்றிலும் விரோதமானது என தமிழ் மக்கள் பொதுச்சபை தெரிவித்துள்ளது.

இன்று(06) தமிழ் மக்கள் பொதுச்சபை வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் மக்கள் பொதுச்சபை ஈழத்தமிழ் மக்களின் விடிவை நோக்கிய பயணத்திற்கும் மக்களை ஒன்று திரட்டி ஒருங்கிணைக்கும் தொலைநோக்குடன் உருவாகியது.

தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு : களமிறக்கப்பட்டுள்ள புதிய முகங்கள்

தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு : களமிறக்கப்பட்டுள்ள புதிய முகங்கள்

சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தல்

அது தன்னைப் போதியளவில் ஒழுங்கமைத்து வலுவூட்டி விரிவாக்குவதற்கு முன்னரேயே மிகக்குறுகிய காலத்தில் அறிவிக்கப்பட்ட சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தலை ஈழத்தமிழ் மக்களை ஒருங்கிணைக்கும் பரீட்சார்த்த களமாக கையாளுவதற்கு முன்வந்தது. இம்முயற்சியில் வெற்றிபெற்றது மாத்திரமல்லாது ஒரு புதிய அரசியல் அணுகுமுறைக்கூடாக ஒடுக்கப்படும் மக்கள் எவ்வாறு தங்கள் ஒற்றுமையினையும் திரட்சியினையும் தேசமாய் முன்நிறுத்தலாம் என்ற மாதிரியையும் உலகின் முன் துணிவுடன் காட்டியுள்ளது.

தமிழ் கட்சிகளின் செயல் : தமிழ் மக்கள் பொதுச்சபை கடும் அதிருப்தி | Tamil People General Assembly Dissatisfied

சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் பொதுச்சபை ஒரு தேர்தலாகவோ, பதவிக்கான போட்டியிடலாகவோ கொண்டிருக்கவில்லை.

சுமந்திரனால் அழிவுப் பாதையில் தமிழரசு கட்சி..!அதிரடியாக பதவி விலகிய கே.வி.தவராசா

சுமந்திரனால் அழிவுப் பாதையில் தமிழரசு கட்சி..!அதிரடியாக பதவி விலகிய கே.வி.தவராசா

நாடாளுமன்றத் தேர்தல் 

ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து சில நாட்களுக்குள் அறிவிக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் பதவிகளுக்கான போட்டி அரசியலாகவும், மக்களை அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்கள் சார்ந்து கூறுபடுத்தி சிதறடிக்கும் செயற்பாடுகளை முதன்மையாக கொண்டுள்ளது என நாங்கள் அறிவோம்.

தமிழ் கட்சிகளின் செயல் : தமிழ் மக்கள் பொதுச்சபை கடும் அதிருப்தி | Tamil People General Assembly Dissatisfied

இத்தகைய நிலையில் தமிழர் தரப்பு அரசியல் கட்சிகளை அவர்களது இருப்புக்கான, பதவிக்கான நலன்களுக்கு அப்பால் அழைத்துச் சென்று தேசத்திற்காய் ஒருங்கிணைக்க கால அவகாசமோ,சாத்தியமோ தமிழ் மக்கள் பொதுச்சபைக்கு தற்போதைய நிலையில் இல்லை.

ஜனாதிபதி தெரிவு : தமிழ் இனம் எதிர்கொள்ளும் சவால்

ஜனாதிபதி தெரிவு : தமிழ் இனம் எதிர்கொள்ளும் சவால்

தேசமாய் ஈழத்தமிழர்களை ஒன்றுதிரட்டுதல்

அதேவேளையில் பதவி நோக்கங்களுக்காக எதிரணியாக பிரிந்து நின்று மக்களின் ஒற்றுமையின் சிதறடிக்கும் போட்டி அரசியல் தமிழ் மக்கள் பொதுச்சபை வரித்துக் கொண்ட 'தேசமாய் ஈழத்தமிழர்களை ஒன்றுதிரட்டுதல்' என்ற உன்னத குறிக்கோளுக்கு முற்றிலும் விரோதமானது என்பதனையும் மீண்டும் நினைவூட்டுகின்றோம்.

தமிழ் கட்சிகளின் செயல் : தமிழ் மக்கள் பொதுச்சபை கடும் அதிருப்தி | Tamil People General Assembly Dissatisfied

இதனடிப்படையில் 2024 நவம்பர் 14ம் திகதி இடம்பெறவுள்ள சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச்சபை எந்தவொரு வகிபாகத்தினையும் எடுப்பதில்லை என்று  2024 ஒக்ரோபர் 05ஆம் திகதி பொதுச்சபைக் கூட்டத்தில் தீர்மானித்துள்ளது.

தமிழ் மக்கள் பொதுச்சபை

தமிழ் மக்கள் பொதுச்சபையில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைப்புகளும் இந்த தேர்தல் தொடர்பாக பொருத்தமான தீர்மானங்களை தங்கள் அமைப்பு சார்ந்து மேற்கொள்ளுமாறு ஊக்குவிக்கப்படுகின்றார்கள்.

தமிழ் கட்சிகளின் செயல் : தமிழ் மக்கள் பொதுச்சபை கடும் அதிருப்தி | Tamil People General Assembly Dissatisfied

இந்த தேர்தலின் பின்பு தமிழ் மக்கள் பொதுச்சபை வலுவூட்டப்பட்டதாகவும், விரிவுபடுத்தப்பட்டதாகவும் ஈழத் தமிழர் தேசத்தைக் கட்டமைப்பதற்காக மக்களை ஒன்று திரட்டும் தனது குறிக்கோள் நோக்கிய பணியில் தளராது பயணிக்கும் என்பதனையும் இவ்விடத்தில் உறுதியாக தெரிவிக்கின்றது என தெரிவித்துள்ளது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026