விடுதலைப் புலிகளின் இன்மையால் இந்தியாவுக்கு ஏற்பட்ட நிலை

S Shritharan China India Liberation Tigers of Tamil Eelam
By Vanan Oct 29, 2023 03:29 PM GMT
Report

இந்தியாவின் பாதுகாப்பிற்கு தமிழ் மக்களே துணை நிற்பார்கள் என்பதை அந்த நாடு இதுவரை உணரவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சீனாவின் ஆய்வு கப்பலை நாட்டிற்குள் அனுமதிக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

சீனாவின் ஆதிக்கம்

அதிகளவு சொத்துக்களை வைத்திருப்போருக்கு பேரிடி! அறிமுகமாகும் புதிய வரி

அதிகளவு சொத்துக்களை வைத்திருப்போருக்கு பேரிடி! அறிமுகமாகும் புதிய வரி

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் சீனாவின் நடவடிக்கை மிக துரிதமாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சீனா ஆசியாவில் தனது ஆதிக்கத்தையும், பலத்தையும் நிலை நிறுத்துவதற்கான சகல முயற்சிகளையும் எடுத்து வருகிறது. அதில் ஒரு நகர்வு தான் இலங்கையை நண்பனாக்கியமை.

விடுதலைப் புலிகளின் இன்மையால் இந்தியாவுக்கு ஏற்பட்ட நிலை | Tamil People Help India S Security Sritharan Said

இலங்கையில் குறிப்பாக அம்பாந்தோட்டையில் தொடங்கி வடக்கு கிழக்கு பகுதிகளிலும் சீனாவின் ஆதிக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

இந்தியா தற்பொழுது தமிழர்களை ஒரு எதிரியாகவும் சிங்கள மக்களை தனது நண்பனாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இலங்கையில் இருக்கின்ற சிங்கள மக்கள் இந்தியாவையும் தமிழர்களையும் எதிரியாக கருதிக் கொண்டு சீனாவை நண்பனாக கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்தியா சரியாக பூகோள அரசியலைப் புரிந்து, தமிழர்களை அரவணைத்து தங்களோடு இணைத்து, வடக்கு கிழக்கினூடாக தமது பாதுகாப்பை தக்கவைக்கவில்லை என்பதைத் தான் இன்றைய சூழல்கள் தெளிவுபடுத்துகின்றன.

இலங்கை முழுவதும் அரச ஊழியர்கள் நாளை கவனயீர்ப்பு போராட்டம்

இலங்கை முழுவதும் அரச ஊழியர்கள் நாளை கவனயீர்ப்பு போராட்டம்

கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் இந்த மண்ணில் இருந்த பொழுது இந்தியாவிற்கு பாதுகாப்பு இருந்தது. இன்று அவர்கள் களத்தில் இல்லாமல் போனதனால் இந்தியாவுடைய பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறி இருக்கிறது.

இப்பொழுதும் கூட இந்தியா இவற்றை சிந்திக்கத் தவறினால் காலமும் வரலாறும் - சீனாவின் ஆதிக்கத்தின் மூலம் இந்தியாவை இலங்கையில் இருந்து தள்ளி வைக்கும். இதனை இந்தியா உணரும் காலம் தொலைவில் இல்லை” என்றார்.


சம்பந்தனின் பதவி விலகல் : மாவைக்கு அவசர அழைப்பு

சம்பந்தனின் பதவி விலகல் : மாவைக்கு அவசர அழைப்பு


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026