விழிப்புடன் செயற்படவேண்டும் தமிழ் மக்கள் -அறிவுரை கூறுகிறார் பிள்ளையான்
pillaiyan
advice
tamilpeople
By Sumithiran
ஸ்ரீலங்கா அரசாங்கம் தேசிய பாதுகாப்பு குறித்து கடும் போக்கை கொண்டிருப்பதால், பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
12 ஆயிரம் முன்னாள் போராளிகளை புனர்வாழ்வளித்து விடுதலை செய்த ராஜபக்ஸ அரசாங்கத்தால், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை, தமிழ் மக்களுக்கு அபிவிருத்தி தேவையில்லை என சந்தர்ப்பவாத அரசியலை நடத்தும் கூட்டமைப்பினரின் கொள்கைகள் தமிழ் மக்கள் மத்தியில் தோல்வி அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்