சரத் வீரசேகரவை உடனடியாக கைது செய் - யாழில் உண்ணாவிரத போராட்டம் (படங்கள்)
Jaffna
Sarath Weerasekara
By pavan
யாழ்ப்பாணம் நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு முன்பாக ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா இன்றைய தினம் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையீடு செய்து நீதிபதிக்கு அச்சறுத்தல் விடுக்கும் சரத் வீரசேகராவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த போராட்டம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதாதைகள்

நீதிதுறையின் சுதந்திரத்திக்கு அச்சுறுத்தல் விடுக்கும் சரத்வீரசேகர உள்ளிட்டஏனையவர்களையும் கைது செய், இனக்கலவரத்திற்கு ஏதுவாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் வீட்டை முற்றுகையிட முனையும் அனைரையும் உடனடியாக கைது செய்து நீதியின் முன் நிறுத்து,
உள்ளிட்ட கோஷங்கள் அடங்கிய பதாதைகளை காட்சிபடுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.


