தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது பெரும்கனவு - அருட்தந்தை சக்திவேல் ஆதங்கம்
prison
dream
sakthivel
By Vanan
அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்காத வரையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது கனவாகவே இருக்கும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மாரிமுத்து சக்திவேல் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் குற்றவாளிகள் எனும் முத்திரை குத்தப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எமது ஊடகத்திற்கு வழங்கிய விசேட நேர்னாணலில் அவர் இதனை கூறினார்.
விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் மீது, தொடர்ந்தும் அரச புலனாய்வாளர்களின் அழுத்தம் இருக்கக் கூடாது என அருட்தந்தை இதன்போது வலியுறுத்தியுள்ளார்.