வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேலன் சுவாமிகள்

Jaffna Buddhism Protest
By Thulsi Dec 21, 2025 09:10 PM GMT
Report

யாழ். தையிட்டி போராட்டக்களத்தில் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் வேலன் சுவாமிகள் உள்ளிட்ட தரப்பினர் அடாத்தாக கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேலன் சுவாமிகள் | Tamil Protest Illegal Buddhist Temple In Jaffna

புதிய இணைப்பு 

யாழ். தையிட்டி போராட்டக்களத்தில் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் உள்ளிட்ட ஐவரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர் 

மல்லாகம் நீதிமன்ற பதில் நீதிபதி காயத்திரி அகிலன் வீட்டில் கைது செய்யப்பட்ட ஐவரும் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஐவரும் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு மீண்டும் தை மாதம் 26 ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள்

கைது செய்யப்பட்டவர்களுள் வேலன் சுவாமிகள், வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஷ் மற்றும் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளடங்குகின்றனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேலன் சுவாமிகள் | Tamil Protest Illegal Buddhist Temple In Jaffna  

கைது செய்யப்பட்ட வலி. வடக்கு பிரதேச சபையின் மூன்று உறுப்பினர்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவரும், இருவர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலதிக தகவல்கள் த.பிரதீபன் 

மூன்றாம் இணைப்பு

யாழ். தையிட்டி போராட்டக்களத்தில் இருந்து கைது செய்யப்பட்ட ஐவரையும் மீட்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் உள்ளிட்ட குழுவினர் காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.

பலாலி காவல் நிலையத்தில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள வேலன் சுவாமிகள், வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட ஐவரையும் மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், தையிட்டி - திஸ்ஸ விகாரைக்கு முன்பாக முகாமிட்டிருக்கும் போராட்டக்காரர்கள் அங்கிருந்து அகன்று செல்வார்களாயின் இவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, போராட்டக்களத்தில் இருந்து சிலர் வெளியேறிச் சென்றுள்ளதாகவும், எனினும், கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்த பின்னரே விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேலன் சுவாமிகள் | Tamil Protest Illegal Buddhist Temple In Jaffna

இரண்டாம் இணைப்பு

யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.

இதன்போது, வேலன் சுவாமிகள், வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர், மற்றும் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மூவர் உட்பட ஐவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், போராட்டக்களத்தில் காவல்துறையிருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் கடும் முறுகல் நிலை ஏற்பட்டதையடுத்து அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், காவல்துறையினரால் கீழே தள்ளி விழுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யப்படும்வரை அகன்று செல்லமாட்டோம் என சிவஞானம் சிறீதரன் உட்பட மக்கள் பிரதிநிதிகள் வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை குறித்த போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றில் தடையுத்தரவை பெற்றுள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட 29 பேருக்கு எதிராக பெயர் குறிப்பிட்டும் போராட்டத்தில் அவர்கள் கலந்து கொள்ள தடையுத்தரவை பெற்று உள்ளனர்.

இந்நிலையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட வேளை, விகாரையை அண்மித்த சூழலில் பெருமளவான காவல்துறையினர், கலகம் அடக்கும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்கள் த.பிரதீபன் 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேலன் சுவாமிகள் | Tamil Protest Illegal Buddhist Temple In Jaffna

முதலாம் இணைப்பு 

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும், விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று ஞாயிற்றுக்கிழமை விகாரை முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

தையிட்டி விகாரைக்கு முன்பாக இன்று (21.12.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணிக்கு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நிவாரண நிதி பெறுவோருக்கு மத்திய வங்கியின் அறிவிப்பு

நிவாரண நிதி பெறுவோருக்கு மத்திய வங்கியின் அறிவிப்பு

இதொரு சட்டவிரோதமான விகாரை

தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின்தோட்டை நந்தாராம தேரருக்கு வழங்கப்படவுள்ள அமரபுர சிறி கல்யான வம்ச குழுவின் வட இலங்கை துணை தலைமை சங்கநாயக பதவிக்கான சிறி சன்னாஸ் சான்றிதழ் மற்றும் விஜின் சான்றிதழ் வழங்கும் விழா இன்று ஞாயிற்றுக்கிழமை புத்தசாசன சமயம் மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி தலைமையில் நடைபெற உள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேலன் சுவாமிகள் | Tamil Protest Illegal Buddhist Temple In Jaffna

இதேவேளை எதிர்வரும் தைமாதம் மூன்றாம் திகதி பௌர்ணமி தினத்தில் வலி வடக்கு தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ ராஜ மகா விகாரையில் புதிய புத்தர் சிலையை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், அதற்கான பாதுகாப்புஅனுமதி கோரி பாதுகாப்பு தரப்பினருக்கு மகா சங்கத்தினரால் எழுத்து மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது

மேலும், தையிட்டி விகாரைக்கு முன்பாக 'இதொரு சட்டவிரோதமான விகாரை" என மும்மொழிகளில் அறிவித்தல் பலகை நாட்டுவது எனவும் விகாராதிபதிக்கு வழங்கப்படவுள்ள கௌரவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஞாயிற்றுக்கிழமை போராட்டம் முன்னெடுப்பது என்றும் கடந்த வியாழக்கிழமை வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் தேசிய மக்கள் சக்தியின் பூரண ஆதரவுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

திஸ்ஸ விகாரையில் முளைக்கும் புதிய புத்தர் சிலை - பாதுகாப்பு கோரி பறந்த கடிதம்

திஸ்ஸ விகாரையில் முளைக்கும் புதிய புத்தர் சிலை - பாதுகாப்பு கோரி பறந்த கடிதம்

எதிர்க்கட்சியை கதி கலங்க வைத்த அநுர...!

எதிர்க்கட்சியை கதி கலங்க வைத்த அநுர...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி