தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் கஜேந்திரகுமாரின் முயற்சி தோல்வியடையும் : வெளியான தகவல்
தமிழ் மக்களின் அரசியல் உரிமை பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பில் ஒருமித்த நிலைப்பாட்டினை வெளிப்படுத்துவதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் (TNPF) தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தலைமையில் எடுக்கப்படும் முயற்சி தோல்வி அடையும் என ஊடகவியலாளர் த.பிரஸ்நோவ் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டின் சிறப்பு களம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரஸ்நோவ் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “கொள்கை ரீதியில் பிரிந்து நிற்கின்ற கட்சிகளுக்கு இடையில் ஒரு ஒற்றுமை ஏற்படமுடியாது. அப்படி ஏற்படுகின்ற ஒற்றுமை என்பதன் எல்லை ஒரு கடிதத்தினை வரையும் அளவே செல்லும். அதன் பின்னர் மீண்டும் ஊடக சந்திப்புக்களை வைத்து ஒருவர் மீது ஒருவர் குறைகூறி அரசியல் செய்வார்கள்.
தமிழரசுக் கட்சியின் (ITAK) உள்ளக குழப்பங்கள் முடிவடைய முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் (S. Shritharan) எடுக்கப்படும் முடிவை கட்சியே ஏற்றுக்கொள்ளுமா தெரியவில்லை.
அதேநேரம் தமிழரசுக் கட்சி, ரெலோ, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய தரப்புக்களின் கடந்த காலம் என்பது ஒற்றுமையை வெளிப்படுத்தவார்கள் என்பதை வெளிப்படுத்தவில்லை. இது ஒரு அணிக்கான முயற்சியாக பார்க்கமுடியும்.
அதேநேரம் தற்போது எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு பின்னால் யார் உள்ளார்கள். இதற்கு முன்னர் எடுக்கப்பட்ட ஒற்றுமை முயற்சிக்கு பின்னால் யார் இருந்தார்கள். ஏன் அந்த ஒற்றுமை முயற்சிகள் தோல்வி அடைந்தது தொடர்பில் யாரும் இதுவரை வெளிப்படையாக பேசுவதே கிடையாது. பின்னர் இந்த ஒற்றுமை முயற்சியில் நம்பிக்கை கொள்ளமுடியாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |