தமிழ் கற்கை நிபுணர் லண்டன் சிவாப்பிள்ளை காலமானார்
பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழ் மக்களின் அடுத்த சந்ததிக்குரிய தமிழ்மொழி வளர்ச்சியில் பெரும் பங்களிப்பை செய்த தமிழறிஞரும்; கணினி வல்லுனருமான சிவகுருநாதபிள்ளை என்ற சிவாப்பிள்ளை தனது 83 வது வயதில் மாரடைப்பால் காலமானார்.
கம்போடியாவில் இடம்பெற்ற - கடாரம் கொண்டான் இராசேந்திர சோழன் மாநாட்டில் அவர் கலந்துகொண்டவேளை இந்த துன்பியல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்டவர்
அவரது பூதவுடலை மீண்டும் பிரித்தானியாவுக்கு லண்டனுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் அவரது உறவினர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

யாழ்ப்பாணம் கட்டைப்பிராய் பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் 1960 களில் பொறியியல் துறை சார்ந்த பணிகளுக்காக பிரித்தானியாவுக்கு புலம் பெயர்ந்திருந்தார்.
இலண்டனில் வசித்த அவர் பிரித்தானியாவில் தமிழ் மொழிகற்கை விடயங்களில் நிபுணத்துவம் கொண்டவராக இருந்துடன் சைவசமயத்தின் வளர்சிக்கும் பங்களித்தவராவர். ஐபிசி தமிழ் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் புலம்பெயர் தமிழர்களின் கல்வி தொடர்பான செவ்விகள் மற்றும் நேர்காணல்களை சிவாபிள்ளை கடந்த காலங்களில் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |