பாடசாலை மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்படும் தமிழ், சிங்கள மொழிகள்
முதல் மொழியாக தமிழ் மற்றும் சிங்களத்தை கற்கும் மாணர்வர்கள், கட்டாயமாக தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளை இரண்டாவது மொழிகளாக கற்க வேண்டும் என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
06 முதல் 09 ஆம் வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) இதனை தெரிவித்தார்.
ஆசிரியர்களுக்கு பயிற்சி
"ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான சிங்கள மாணவர்கள் தமிழை இரண்டாவது மொழியாகவும், தமிழ் மாணவர்கள் சிங்களத்தை இரண்டாவது மொழியாகவும் கற்க வேண்டும்" என்று பிரதமர் அதன்போது சுட்டிக்காட்டினார்.
இதன்படி, ஆசிரியர்களுக்கு மொழிகளைக் கற்பிக்க பயிற்சி அளிக்கும் வரை இந்தத் திட்டம் ஒரு முன்னோடித் திட்டமாக மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
