வவுனியாவில் பல்கலையில் புறக்கணிக்கப்படும் தமிழ் மாணவர்கள் !
வவுனியா பல்கலைக்கழகத்தில் (University of Vavuniya) தமிழ் மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா பல்கலைக்கழகத்தில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களம் என மூவின மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
இந்தநிலையில் தமிழ் மற்றும் முஸ்லீம் மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்களின் நிகழ்ச்சி திட்டங்களில் புறக்கணிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அனைத்து நிகழ்ச்சி
இதன்படி, சிங்கள மாணவர்களே அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதாக குறிப்பிடப்படுகின்றது.
தற்போது பல்கலைக்கழக விளையாட்டு போட்டி இடம்பெற்று வரும்நிலையில் அனைத்து விளையாட்டு நிகழ்விலும் சிங்கள மாணவர்கள் மட்டுமே பங்கேற்பதற்கு அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாணவர்கள் கோரிக்கை
அத்தோடு, தமிழ் முஸ்லீம் மாணவர்கள் முழுமையாக புறக்கணிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் கவனமெடுத்து அனைத்து மாணவர்களுக்குமான சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
2 நாட்கள் முன்