யோஷித மற்றும் அவரது பாட்டிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
யோஷித ராஜபக்ச (Yoshitha Rajapaksa) மற்றும் அவரது பாட்டி டெய்சி ஆகியோருக்கு குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டதன் பின்னர் அவர்களை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவானது இன்று (04.04.2025) கொழும்பு உயர் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவர் மீதும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நீதிமன்றம் உத்தரவு
இந்நிலையில், சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே முன்னிலையில் கையளிக்கப்பட்டன.
இதன்போது பிரதிவாதிகளை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி, இது தொடர்பான விரிவான விசாரணைகளை மே 30 ஆம் திகதி நடத்துவதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிக்குவாரா நாமல்
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தனது சட்டத்தரணி அந்தஸ்தை மோசடியாகப் பெற்றாரா என்பதை விசாரணைகளை நடத்தி, நீதிமன்றத்திற்கு உண்மைகளை அறிக்கையிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவானது, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலியினால் நேற்று (03) குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ச சட்டப்பூர்வ அந்தஸ்தைப் பெற்றது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்டு தலைமை நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்