தேர்தலில் போட்டியிட மாட்டோம் ...! வீ.ஆனந்தசங்கரி அறிவிப்பு
தமிழர் விடுதலைக் கூட்டணி இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையாளர் நாயகத்துக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி (V. Anandasangaree) அனுப்பி வைத்த கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில், இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலை தமிழர் விடுதலைக் கூட்டணி தவிர்க்க முடியாத காரணத்தினால் நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்ய முடியவில்லை என தெரிவிக்கிறோம் என்றுள்ளது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிர்வாகம் தொடர்பான நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்கள் கூட்டணி
உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ் மக்கள் கூட்டணி இன்று யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.
இன்றையதினம் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் காரைநகர் பிரதேச சபைக்கான வேட்புமனுவை மாத்திரம் தாக்கல் செய்துள்ள தமிழ் மக்கள் கூட்டணி ஏனைய சபைகளுக்கும் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்