எலிசபெத் மகாராணிக்கு முதலாவதாக அஞ்சலி செலுத்திய தமிழ் பெண்..! வெளியான காணொளி
புதிய இணைப்பு
இலங்கை வம்சாவளியை சேர்ந்த வனேசா நந்தகுமாரன் என்ற 56 வயதான பெண் பிரித்தானிய மகாராணி எலிசபெத்திற்கு முதலாவதாக அஞ்சலி செலுத்தியுள்ளார் என தகவல்கள் கிடைக்கபெற்றுள்ளன.
இரண்டாவது எலிசபெத் மகாரணியின் உடல் நேற்றைய தினம் லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டடது.
இதன் போது இறுதி அஞ்சலி செலுத்துவதற்கான முதல் சந்தர்ப்பம் வனேசா நந்தகுமாரன் என்ற இலங்கை வம்சாவளியை சேர்ந்த தமிழ் பெண்ணுக்கு வழங்கப்பட்டதாக நேற்றைய தினம் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், தற்பொழுது குறித்த பெண் மகாராணிக்கு அஞ்சலி செலுத்திய காணொளி வெளியாகி வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் உடல் பிரித்தானிய நேரம் மாலை 5 மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
முதல் அஞ்சலி செலுத்திய நபர்
இதன் போது இறுதி அஞ்சலி செலுத்துவதற்கான முதல் சந்தர்ப்பம் இலங்கை வம்சாவளியை சேர்ந்த வனேசா நந்தகுமாரன் என்ற 56 வயதான பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்மணி மேற்படிப்புக்காக 1980 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து இங்கிலாந்து சென்றுள்ளார்.
இது தொடர்பில் குறித்த பெண் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, " எனக்கு இப்படியான சந்தர்ப்பம் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. மகாராணியாருக்கு முதலில் அஞ்சலி செலுத்த கிடைத்த சந்தர்ப்பம் தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றேன்.
வெயில், மழை என்ற தடைகளை பாராது நான் மகாராணிக்கு அஞ்சலி செலுத்த காத்திருந்தேன்", எனக் குறிப்பிட்டார்.
இறுதிச்சடங்கு
இரண்டாவது எலிசபெத் மகாரணியின் இறுதிச்சடங்குகள் எதிர்வரும் 19 ஆம் திகதி லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்தில் நடைபெறவுள்ளது.
இதற்காக ஏற்கவே அவரது உடல் ஸ்கொட்லாந்தில் இருந்து லண்டனுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. உடல் மக்களின் அஞ்சலிக்காக தற்போது பகிங்ஹாம் மாளிகையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.