நோயாளர்காவு வாகனத்தை விடுவித்த தமிழ் இளைஞர்கள்: விரைந்து செயற்பட்டதால் பாராட்டு
முள்ளிவாய்க்காலில் இன்று நண்பகல் வேளையில் ஏற்பட்டிருந்த வாகன நெரிசலில் நோயாளர்காவு வாகனம் ஒன்று சிக்கிக்கொண்டது.
1990 அவசர சிகிச்சை காவு வாகனமான இது முல்லைத்தீவில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கிய தன் பயணத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் வாகன நெரிசலில் சிக்கிக்கொண்டிருந்தது.
அதன்போது, வாகன நெரிசலை ஏற்படுத்தி இருந்த வாகனங்கள் அத்தனையினதும் நகர்வுகளை உடன் நிறுத்த சாராதிகளை பணித்து நோயாளர்காவு வாகனத்தை அங்கிருந்த தமிழ் இளைஞர்கள் நகர்த்தி இருந்தனர்.
பலரும் பாராட்டு
சாதாரணமாக நடந்து செல்லவே கடினமாக இருந்த இந்த வாகன நெருக்கடியில் நோயாளர்காவு வாகனம் மணிக்கு இருபது கிலோமீற்றர் வேகத்திற்கு எட்டியிருக்கும் படி அதற்கு பாதை ஏற்படுத்தி கொடுத்திருந்தனர்.
அந்த இடத்தில் இளைஞர்கள் தன்னிச்சையாகவும் பொறுப்புணர்வோடு செயற்பட்டிருந்தமையை நெருக்கடியில் சிக்கியிருந்த பலரும் பாராட்டியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
