சட்டவிரோதமாக தமிழகத்திலிருந்து கடல்வழியாக வந்த நால்வர் கடற்படையால் கைது
சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக இந்தியாவிலிருந்து திரும்பி வந்த யாழ்ப்பாணவாசி மற்றும் அவர் வருவதற்கு உதவிய மேலும் நால்வர் உட்பட ஐவரை ஸ்ரீலங்கா கடற்படையினர் நேற்று கைதுசெய்துள்ளனர்.
சந்தேக நபர் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு விமானம் மூலம் சென்று சிறிய படகொன்றில் மன்னாருக்கு திரும்பும் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு இந்தியாவில் இருந்து திரும்பி வந்த நபர் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர் என்றும் ஏனையவர்கள் மன்னார் பகுதியில் வசிப்பவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்சமயம் இவர்கள் அனைவரும் அந்தப் பகுதியின் பொது சுகாதார ஆய்வாளர்களின் உத்தரவுக்கு அமைவாக தனிமைப்படுத்துமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்பரப்பில் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து கடற்படையினர் தொடர்ந்தும் எச்சரிக்கையாக உள்ளனர்.
