தமிழர் வராலாற்று பாரம்பரியம் காக்க வேண்டும்: தி.சரவணபவன்

Batticaloa Ilankai Tamil Arasu Kachchi Sri Lanka General Election 2024
By Harrish Oct 23, 2024 06:33 AM GMT
Report

உலகில் மூத்த குடிகளாகிய தமிழரது வரலாற்று பாரம்பரியங்கள் மறைக்கப்பட்டுள்ளது எனவும் அதனைப் புத்துயிர்பெறச் செய்து காக்க வேண்டும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர் தி.சரவணபவன்(T. Saravanabhavan) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் கலைஞர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இஸ்ரேலிய பிரஜைகள் மீதான தாக்குதல் திட்டம் - இருவர் கைது

இஸ்ரேலிய பிரஜைகள் மீதான தாக்குதல் திட்டம் - இருவர் கைது

தமிழர் வரலாறு

அவர் மேலும் தெரிவிக்கையில், 

“தமிழர் வரலாறானது இலங்கையில் திரிபடையச் செய்யப்பட்டுள்ளது. உண்மையில் உலகில் மூத்த மொழி தமிழ் மொழியாகும் நாம் மூத்த குடிகள்.

எமது வரலாற்று பாரம்பரியங்கள் மறைக்கப்பட்டுள்ளது. அதனைப் புத்துயிர்பெறச் செய்ய வேண்டும். 

தமிழர் வராலாற்று பாரம்பரியம் காக்க வேண்டும்: தி.சரவணபவன் | Tamils Historical Heritage Itak General Election

சகோதர இனக் கலைஞர்களுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் கொடுப்பது போன்று தமிழ் கலைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. 

அவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் இருந்தும் புறக்கணிக்கப்படுகின்றமை, இசைவாத்தியக் கருவிகள் புனரமைப்பு ஏற்பாடுகள் இன்மை போன்ற முறைப்பாடுகளை முன்வைத்த போதும் சரியான தீர்வு கிடைக்கவில்லை.

இதற்கான முறைப்படுத்தப்பட்ட ஏற்பாடுகளை நான் கட்டாயம் செய்வேன். 

டிஜிடல் திட்டம்

மக்கள் அதிகாரம் வழங்கும் போது அதனை செய்வது எனக்கு இன்னும் இலகுவாக இருக்கும். 

நான் மாநகர முதல்வராக இருக்கும் போது காந்திப் பூங்காவில் மாதந்தோறும் " பௌர்ணமி கலை இலக்கிய விழாவை" நடாத்தியிருந்தோம். அதன் மூலமாக கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கி அவர்களை உற்சாகப்படுத்துவது எங்களது நோக்கமாக இருந்தது.

தமிழர் வராலாற்று பாரம்பரியம் காக்க வேண்டும்: தி.சரவணபவன் | Tamils Historical Heritage Itak General Election

எமது கலை எமது வரலாறு அழியக்கூடாது . மட்டக்களப்பிற்கு என்று வரலாறு உள்ளது. 

புளிமாறன் , உலகநாச்சி என பலர் இங்கு ஆட்சி புரிந்துள்ளனர். அவர்களின் வாழ்க்கை வரலாறு அவர்களுக்கும் எமக்கும் என்ன தொடர்பு என வருங்கால சந்ததிகளுக்கு நாம் காட்ட வேண்டும்.

"காந்திப்பூங்காவில் அருங்காட்சியகம் அமைத்து அங்கு 3D திரையில் எமது பரம்பரை ஆட்சியாளர்களின் வரலாறு பாகுபலி படத்தினைப் போல காட்சிப்படுத்தப்பட வேண்டும்" என்பதே எனது திட்டம்.

தமிழர் வராலாற்று பாரம்பரியம் காக்க வேண்டும்: தி.சரவணபவன் | Tamils Historical Heritage Itak General Election

இதன் மூலம் எமது வரலாறு எல்லோரையும் சென்றைடையும் ஏடு புத்தகத்தில் உள்ள விடங்களை டிஜிடல் மயமாக்கி டிஜிடல் நூலகம் அமைத்துள்ளோம். அதனை விஸ்தரித்து எமது சிறார்கள் படிக்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.

சந்தையில் பொருட்களின் விலையேற்றம்...! அநுர அரசை கடுமையாக சாடும் முன்னாள் எம்.பி.

சந்தையில் பொருட்களின் விலையேற்றம்...! அநுர அரசை கடுமையாக சாடும் முன்னாள் எம்.பி.

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு பிடியாணை : உயர் நீதிமன்றம் உத்தரவு

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு பிடியாணை : உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்