தூசுதட்டப்படாத ஜே.வி.பி மீதான அடக்குமுறை! நிலையற்ற நீதிப் போராட்டத்தில் தமிழர்கள்
ஜேவிபியின் அரசியல் வரலாறு, சோசலிச இலட்சியங்களையும் தேசியவாதத்தையும் கலந்த ஒரு சிக்கலான பயணமாகும்.
இந்த பயணத்தில் தமிழர்களுக்கு எதிரான இனவாத அரசியலில் ஜே.வி.பி நேரடியாகவும், மறைமுகமாகவும் பங்கு கொண்டமையை இன்றளவும் தமிழ் சமுகம் வெளிப்படுத்தி வருகிறது.
குறிப்பாக 1983 இனக்கலவரம் மற்றும் 1987-89 கிளர்ச்சிகளில் இந்த கொடூரங்கள் அரங்கேறியிருந்தன.
ஆனால் ஜே.வி.பிக்கு எதிரான இலங்கை அரசின் கொடுமைகள், குறிப்பாக 1971 மற்றும் 1987-1989 கிளர்ச்சிகளின் போது, பெருமளவு உயிரிழப்புகள், காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள், மற்றும் மனித உரிமை மீறல்களை உள்ளடக்கியவை.
இவை இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு இருண்ட அத்தியாயமாகக் கருதப்படுகிறது. இந்த நிகழ்வுகள் ஜே.வி.பியின் ஆரம்பகால தோல்விகளுக்கு வழிவகுத்தாலும், அவர்களின் பின்னைய மறுபிறப்பு மற்றும் ஆட்சி பிடிப்பு, இலங்கையின் சிக்கலான அரசியல் இயக்கவியலை வெளிப்படுத்துகிறது.
இவ்வாறான பல கறுப்பு பக்கங்கள் ஜே.வி.பிக்கு எதிராக வெளிப்படுத்தப்பட்டபோதும், இன்று ஆட்சியும் அதிகாரமும் கையிலிருந்தும் அவர்களால் அதற்கான நீதி நடவடிக்கைகளில் அடியெடுத்து வைத்துள்ளனரா என்பது கேள்விக்குறியே...
அவ்வாறிருக்கையில் ஜே.வி.பியை தாய்க்கட்சியாக கொண்ட அநுர அரசாங்கம் எவ்வாறு தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும்?
ஜே.வி.பி கிளர்ச்சிகளுக்கு எதிரான சிறிலங்கா அரசின் கொடூரமான அடக்குமுறைகள் இலங்கை சமூகத்தில் பயத்தையும் பிளவையும் உறுவாக்கிய நிலையில், ஈழத்தமிழரின் கோரிக்கைக்கும் நீதிகோரலுக்கும் செவிசாய்க்குமா கரம் கொடுக்குமா அநுர அரசாங்கம் என்பதை அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் பின்வரும் காணொளியில் விளக்கியுள்ளார்...

