தமிழர்களே பொது வேட்பாளருடன் அணிதிரளுங்கள் : ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அறைகூவல்

Sri Lankan Tamils P Ariyanethran sl presidential election
By Sathangani Sep 17, 2024 03:36 AM GMT
Report

தமிழ் மக்கள் தனித்துவமான பிரச்சினைகளுடன் தங்களுக்கான நீதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என இலங்கைத்தீவிற்கு மட்டுமல்ல முழு அகிலத்திற்கும் உணர்த்த ஒன்றாய் சங்கு முழங்க தமிழர்களே அணி திரளுங்கள் என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது குறித்து வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

“இன்னும் ஐந்து தினங்களில் ஒட்டுமொத்த வடகிழக்கின் தமிழரும் ஒரு தேசமாக தம் உணர்வுகளை வெளிப்படுத்த தயாராகிவிட்டதை தமிழ் கிராமங்கள், நகரங்களிலிருந்து வரும் தமிழராய் ஒருமித்து திரண்டெழும் உணர்வு வெளிப்பாடுகள் பறைசாற்றி நிற்கின்றன.

இரட்டை வேடம் போடும் மாவை! சஜித்திற்கு ஆதரவு என அறிக்கை - பொது வேட்பாளருக்கு பிரசாரம்

இரட்டை வேடம் போடும் மாவை! சஜித்திற்கு ஆதரவு என அறிக்கை - பொது வேட்பாளருக்கு பிரசாரம்

தமிழ் பொது வேட்பாளர் 

எம் எதிர்கால நல்வாழ்விற்கு எம் சவால்களை ஒருமித்து எதிர்கொண்டு வெற்றி கொள்ள எம் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கும் பயணத்தில் புதிய அத்தியாயத்தை எதிர்வரும் சனியன்று ஒட்டுமொத்தமாக தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு (P. Ariyanethiran) அதாவது சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பதன் ஊடாக நிலைநாட்டுவோம்.

தமிழர்களே பொது வேட்பாளருடன் அணிதிரளுங்கள் : ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அறைகூவல் | Tamils Join With Tamil General Candidate In Sl

எதிர்கால தமிழ் தேசிய அரசியல் புதிய செல்நெறியில் மக்களின் முழுமையான முதன்மை பங்கேற்புடன் விலைபோகாத, தடம் மாறாத மக்களின் அவலங்களை சிந்திக்கின்ற உரிமைகளை வென்றெடுப்பதற்கான அர்ப்பணிப்பும் தமிழ்த்தேசிய இருப்பை நிலைநிறுத்தும் வழி வரைபடத்தில் இயங்கும் வகையிலான அரசியலாளர்களால் முன்னெடுக்கப்பட வேண்டும்.

யாழில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக ஒன்று கூடிய மாபெரும் கூட்டம்

யாழில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக ஒன்று கூடிய மாபெரும் கூட்டம்

தமிழ் தேசிய பற்றுறுதி

இதற்காக இதயசுத்தியான தமிழ் தேசிய பற்றுறுதியும் செயற்பாட்டு வினைத்திறனும் கொண்ட கட்சிகளை கடந்த மனிதர்களின் நிபுணத்துவ வழிப்படுத்தலை வழங்கும் பொதுக்கட்டமைப்பு ஒன்று இயங்கும் வண்ணம் நமக்காக நாமே சங்கிற்கு வாக்களிப்போம்.

தமிழர்களே பொது வேட்பாளருடன் அணிதிரளுங்கள் : ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அறைகூவல் | Tamils Join With Tamil General Candidate In Sl

தமிழராய் திரண்டு தனித்துவ மக்கள் குழுமமாக இத்தீவில் தலைநிமிர்வோம் எங்கள் வாழ்வும் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு.“ என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் பிளவடைந்துள்ள தமிழரசுக்கட்சி: தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்

தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் பிளவடைந்துள்ள தமிழரசுக்கட்சி: தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்