திஸ்ஸ காணியை மாற்றீடாக வழங்கத் தயார் - நயினாதீவு விகாரை விகாராதிபதி அதிரடி
நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி நவதகலபதும கீர்த்தி திஸ்ஸ தேரர் நேற்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் ம. பிரதீபனை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பில் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் மாவட்ட செயலாளரால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் விகாராதிபதி கேட்டறிந்தார். மேலும் தனது நிலைப்பாட்டையும் மாவட்ட செயலாளரிடம் தெரியப்படுத்தினார்.
அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள்
இதேநேரம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட விகாராதிபதி “தையிட்டியில் திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழ விகாரைக்கு என அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் தனியாருக்குச் சொந்தமானவை.

அவற்றில் தற்போது விகாரை அமைந்துள்ள சுமார் 1.2 ஏக்கர் காணியைத் தவிர ஏனைய காணிகளை காணி உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும்.
திஸ்ஸ விகாரைக்கு எனச் சொந்தமாகக் காணிகள் உள்ளன. அந்தக் காணிகள் எனது கட்டுப்பாட்டின் கீழ் தான் உள்ளன.
எனவே, தற்போதுள்ள திஸ்ஸ விகாரையை என்னிடம் பொறுப்பளித்தால் விகாரை அமைந்த 1.2 ஏக்கர் காணிகளின் உரிமையாளர்களுக்குத் எனது பொறுப்பின் கீழ் உள்ள திஸ்ஸ விகாரை காணியில் 1.2 ஏக்கர் காணியை மாற்றீடாக வழங்கத் தயார் என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |