யாழ் செம்மணியில் முன்னெடுக்கப்பட்ட கையொப்பப் போராட்டம்
யாழில் (Jaffna) ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து “நீதியின் ஓலம்” என்ற கையொப்பப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது தாயகச் செயலணி அமைப்பினரால் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரலை வலியுருத்தி இடம்பெற்றுள்ளது.
இதனடிப்படையில், போராட்டமானது இன்று (23) காலை 10.00 மணியளவில் மாணவி கிருசாந்தி கொலை சம்பவத்துடன் தொடர்புடைய செம்மணி பகுதியில் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட இடத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மரணித்த உறவு
மரணித்த உறவுகளை நினைவுகூர்ந்து மௌன வணக்கம் செலுத்தப்பட்டு நினைவுச் சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தி நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் நிகழ்வின் வடக்கின் ஏற்பாடுக்குழு இணைபாளர் ஜெயசித்திரா, போராட்டத்தின் நோக்கம் குறித்து உரையாற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார்.
வலுவான தீர்மானம்
இதையடுத்து, கையெழுத்து பெறும் நிகழ்வு ஆரமிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு தமிழர் தாயகமெங்கும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கையொப்பப் போராட்டத்தி ஊடாக இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி உட்பட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளுக்கும் முழுமையான சர்வதேச நீதிவிசாரணை நடைபெற வேண்டும் என போராட்டக்காரர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கை மீது வலுவான தீர்மானம் கொண்டு வந்து, அனைத்து நாடுகளும் தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |











ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 5 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
4 நாட்கள் முன்