வெளிநாடொன்றில் இறுதி நேரத்தில் நிறுத்தப்பட்ட தமிழருக்கான தூக்கு தண்டனை

Tamils Malaysia Singapore
By Jaso Feb 20, 2025 10:36 AM GMT
Report

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தமிழர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை கடைசி நேரத்தில் நிறுத்திவைத்து சிங்கப்பூர்(singapore) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மலேசிய(malaysia)தமிழரான பன்னீா் செல்வம் பரந்தாமன் என்பவருக்கே இவ்வாறு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்

இவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மலேசியா மற்றும் சிங்கப்பூரில் சமூக ஆர்வலர்கள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து, தண்டனையை நடைமுறைப்படுத்துவதை தற்காலிகமாக நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.

வெளிநாடொன்றில் இறுதி நேரத்தில் நிறுத்தப்பட்ட தமிழருக்கான தூக்கு தண்டனை | Tamils Sentenced To Death In Singapore Last Minute

மலேசியாவைச் சோ்ந்த தமிழ் வம்சாவளி இளைஞரான பன்னீா் செல்வம் 52 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் சிங்கப்பூரில் கடந்த 2014-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா்.

சிங்கப்பூா் சட்டப்படி 15 கிராமுக்கு மேல் ஹெரோயினுடன் ஒருவா் பிடிபட்டாலே அவருக்கு மரண தண்டனை விதிக்க முடியும். அதன்படி, அவருக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மீண்டும் நாடாளுமன்றுக்குள் ரணில்..! வெளியாகும் தகவல்கள்

மீண்டும் நாடாளுமன்றுக்குள் ரணில்..! வெளியாகும் தகவல்கள்

இந்த நிலையில், அவரை இன்று வியாழக்கிழமை தூக்கிலிட சிங்கப்பூர் சிறைத்துறை அதிகாரிகள் முடிவு செய்திருந்தனா்.

இதனிடையே, பன்னீா் செல்வத்துக்கு தெரியாமலேயே அவா் மூலம் ஹெரோயின் கொடுத்தனுப்பப்பட்டது என்பதால் அவரை தூக்கிலிடுவதை நிறுத்திவைக்க வேண்டும் என்று சா்வதேச மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன.

தொடர்ந்து, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பலர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டங்களை நடத்தினர்.

சிங்கப்பூர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு 

சிங்கப்பூர் மரண தண்டனை எதிர்ப்பு ஆர்வலர் கிர்ஸ்டன் ஹெய்ன் என்பவர் பன்னீர் செல்வத்தின் மரண தண்டனையை நிறுத்திவைக்க கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

வெளிநாடொன்றில் இறுதி நேரத்தில் நிறுத்தப்பட்ட தமிழருக்கான தூக்கு தண்டனை | Tamils Sentenced To Death In Singapore Last Minute

போதைப் பொருள் வழக்குகளில் மரண தண்டனை விதிப்பதற்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாலும், பன்னீர் செல்வம் நேரடியாக குற்றச்செயலில் ஈடுபடாததாலும் தண்டனையை நிறுத்திவைக்குமாறு வாதிடப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பன்னீர் செல்வத்தின் தண்டனையை நிறுத்திவைக்க சிறைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

உக்ரைன் ஜனாதிபதி வெளியேற்றப்படுவார் - கடுந்தொனியில் எச்சரிக்கும் ட்ரம்ப்

உக்ரைன் ஜனாதிபதி வெளியேற்றப்படுவார் - கடுந்தொனியில் எச்சரிக்கும் ட்ரம்ப்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்