உள்ளூராட்சி தேர்தலை விரைவாக நடத்துங்கள் - பகிரங்கமாக வேண்டுகோளை விடுத்த துரைரெட்ணம்

Sri Lankan Tamils Tamils TNA Election
By Dharu Jan 09, 2023 10:45 AM GMT
Report

தமிழர்கள் ஒரு குடையின் கீழ் அணி திரளப்பட வேண்டும் என்பது தமிழர்களுடைய நிலைப்பாடு என இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உப தலைவருமான இரா.துரைரெட்ணம் இன்று(9) மட்டு ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

குறித்த ஊடக சந்திப்பிலேயே மேற்கூறியவாறு தெரிவித்திருந்தார்.

உள்ளூராட்சி சபை தேர்தல்

உள்ளூராட்சி தேர்தலை விரைவாக நடத்துங்கள் - பகிரங்கமாக வேண்டுகோளை விடுத்த துரைரெட்ணம் | Tamils Should Gather Together Election Durairatnam

மேலும் கருது தெரிவித்த அவர்,

"தனி மனித சுதந்திரம், வாக்களிக்கும் உரிமையை அவனுக்கு வழங்கும் செயல் வடிவங்களை மத்திய அரசாங்கம் வழங்க வேண்டும். சிறிலங்கா அரசாங்கம் உள்ளூராட்சி சபை தேர்தல்களை மிக விரைவாக நடத்துவதற்கு தடுப்புச் சுவர்களை அமைக்காமல், தேர்தல் ஆணைக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை தேர்தல் ஆணைக்குழு அமுல்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் இறமையுடன் தமது ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.

அதை விடுத்து இந்த தேர்தலை நிறுத்துவதற்கும் மனு தாக்கல் செய்யப்பட்டதற்கு பின் ஒத்தி வைப்பதற்கும் எடுக்கப்படுகின்ற முடிவுகள் ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடு. தேர்தல் தொடர்பான சம்பந்தப்பட்ட விடயத்தில் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் மத்திய குழுவாகிய மத்திய குழு உறுப்பினர்களோடு இணைந்துமட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் சுரேஷ் பிரேமச்சந்திரன் வழிகாட்டுதலின் கீழ் பெயரில் மத்திய குழு கூட்டம் நடைபெற்றது.

தமிழர் பிரதிநிதித்துவம்

உள்ளூராட்சி தேர்தலை விரைவாக நடத்துங்கள் - பகிரங்கமாக வேண்டுகோளை விடுத்த துரைரெட்ணம் | Tamils Should Gather Together Election Durairatnam

இந்த மத்திய குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக கிழக்கு மாகாணத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் வளர்ச்சி பெற வேண்டுமாயின் ஒற்றுமையின் கீழ் தேர்தலில் போட்டியிட வேண்டும் என எமது கட்சி தீர்மானித்துள்ளது.

இதற்கு அமைவாக இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு எமது கட்சித் தலைமையிடம் நாங்கள் வேண்டுகோளை விடுத்துள்ளோம். இன்றோ நாளையோ சரியான தீர்வு கிடைக்கும் பட்சத்தில் அடுத்த கட்ட தேர்தலில் போட்டியிட தயார் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம்.

இந்த சூழ்நிலையில் ஜனநாயக ரீதியாக வாக்களித்து பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட மக்கள் உணர்ந்து இருக்கின்ற நிலையில், இந்த தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் மூன்று கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

தனித்துவமாக உள்ளூராட்சி

உள்ளூராட்சி தேர்தலை விரைவாக நடத்துங்கள் - பகிரங்கமாக வேண்டுகோளை விடுத்த துரைரெட்ணம் | Tamils Should Gather Together Election Durairatnam

தமிழர் விடுதலை இயக்கம், தமிழர் விடுதலை கழகம் , தமிழரசு கட்சி இதில் ஒரு கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்த மத்திய குழு கூட்டத்தில் தனித்துவமாக உள்ளூராட்சி தேர்தலில் தனியே போட்டியிடுவதால் நன்மைகள், தொழில்நுட்ப ரீதியான வளர்ச்சிகள் அதிகம் உள்ளன என்ற எடுக்கப்பட்ட தீர்மானம் அந்த கட்சியின் ஜனநாயக தீர்மானம் ஆகும்.

அதை நாங்கள் வெறுக்கவில்லை. ஆனால் கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் , மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளை பொருத்தவரையில் கடந்த காலத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்ற விடயத்தை பொறுத்தவரையில், தமிழர்கள் ஒரு குடையின் கீழ் அணி திரளப்பட வேண்டும் என்பது தமிழர்களுடைய நிலைப்பாடு.

தமிழ் மக்களை பொருத்தவரையில் ஒற்றுமையே எமது சின்னம் வீடு என்ற அறிவிக்கப்பட்ட நிலையில், வாக்களிக்கப்பட்ட நிலையில் ஒரு கட்சி எல்லா கட்சியையும் பயன்படுத்திக் கொண்டு வீட்டு சின்னத்திற்கான அங்கீகாரத்தை எடுத்து விட்டு, தனியே தேர்தலில் போட்டியிடுவது என்ற தீர்மானம் மீளாய்வு செய்யப்பட வேண்டும்.

மக்கள் அந்த தீர்மானத்தை விரும்பவில்லை

உள்ளூராட்சி தேர்தலை விரைவாக நடத்துங்கள் - பகிரங்கமாக வேண்டுகோளை விடுத்த துரைரெட்ணம் | Tamils Should Gather Together Election Durairatnam

இந்த நிலையில் எமது கட்சியை பொறுத்த வரையில் ஒற்றுமையுடன் செயல்பட நாம் மிகவும் தயாராக உள்ளோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் உள்ள தமிழரசு கட்சி தேர்தலில் தனித்துவமாக செயல்பட முடிவெடுத்திருந்தாலும் கூட அதில் அங்கம் வருகின்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கம், தமிழீழ விடுதலைக் கழகம் போன்ற கட்சிகள் அவ்வாறு முடிவுகளை எடுத்து விடாமல் , தமிழ் மக்களின் கிழக்கு மாகாண அம்பாறை, திருகோணமலை , மட்டக்களப்பு மக்களின் ஏகோபித்த குரலாக ஒலிக்கின்ற ஒற்றுமையாக தமிழ் தலைமைகள் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை அவர்கள் நிலை நாட்டுவார்கள் என நாங்கள் நம்புகின்றோம்.

தமிழரசு கட்சி எடுத்திருக்கின்ற தீர்மானம் ஜனநாயக ரீதியாக அவர்களின் முறையில் சரியாக இருந்தாலும், மக்கள் அந்த தீர்மானத்தை விரும்பவில்லை என்ற வழிகாட்டுதல்கள் கடந்த நேற்றைய முன்னைய தினம் வடக்கு கிழக்கு ஆர்ப்பாட்டங்கள், அனைவரும் ஒன்றாக சேர வேண்டும் ,

அணி திறள வேண்டும் , என்று பல ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. இந்நிலையில் தமிழீழ விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலை இயக்கம் ஆகிய கட்சிகள் இந்த விடயத்தில் ஒற்றுமையை நழுவிப் போக விடாமல், ஒற்றுமையாக இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான செயல்படிவத்தை கொடுப்பார்கள்.

தமிழ் சிங்கள கட்சி

உள்ளூராட்சி தேர்தலை விரைவாக நடத்துங்கள் - பகிரங்கமாக வேண்டுகோளை விடுத்த துரைரெட்ணம் | Tamils Should Gather Together Election Durairatnam

அப்படி கொடுத்தால் அதற்கு ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி தனது பங்களிப்புகளை ஒத்துழைப்புகளை நல்குவோம். மாகாண சபை முறைமை தொடர்பாக ஒரு மகிழ்ச்சியான நல்ல செய்திகளை நாங்கள் தினந்தோறும் அறியக் கூடியதாக இருக்கின்றது.

குறிப்பாக மாகாண சபை முறைமையை விரைவாக அமல்படுத்துங்கள், மாகாண சபை தேர்தலை நடத்துங்கள் 13 வது திருத்தச் சட்டத்தில் உள்ள விடயங்களை அமல்படுத்துங்கள், என்ற கோரிக்கைகளை தமிழ் சிங்கள கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும், கடந்த ஒரு வாரத்திற்கு முதல் முதல் தமிழ்நாட்டில் நடந்த கட்சிகளின் மாநாட்டில் கூட மாகாண சபை முறைமை அமுல்படுத்தப்பட வேண்டும் என்கின்ற நிலையில் வடக்கு கிழக்கில் உள்ள கட்சிகளும் மலையகக் கட்சிகளும் மாகாண சபை முறைமையை அமுல்படுத்துங்கள்.

அதிபர் இந்தியாவிற்கு பயணம்

உள்ளூராட்சி தேர்தலை விரைவாக நடத்துங்கள் - பகிரங்கமாக வேண்டுகோளை விடுத்த துரைரெட்ணம் | Tamils Should Gather Together Election Durairatnam

எமது நாட்டு அதிபர் அவர்கள் அடுத்த வாரம் இந்தியா பயணம் செய்யக் கூடியதை நாம் அறியக் கூடியதாக உள்ளது. இந்த நிலையில் இந்தியாவைப் பொறுத்தவரையில் சர்வதேச ரீதியாக ஐக்கிய நாட்டு சபைக்கு கூட மாகாண சபை முறைமையை அமல்படுத்துங்கள் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அதிபர் இந்தியாவிற்கு பயணம் செய்ய உள்ளார்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கையில் அமுலாக்கப்பட்ட இலங்கை இந்தியா ஒப்பந்தம் ஊடாக மாகாண சபை முறைமை அமல்படுத்தப்பட வேண்டும். மாகாண சபை முறைமையில் உள்ள அதிகாரங்கள் சட்ட ரீதியாக சில அதிகாரங்கள் நிறுத்தப்பட்டாலும் அதிக அவற்றை அமல்படுத்தக் கூடியவாறு 13-வது திருத்தச் சட்டத்தில் உள்ள விடயங்களை அமுல்படுத்த வேண்டும்.

அதோடு கிழக்கு மாகாணத்திற்குரிய , வட மாகாணத்திற்குரிய இலங்கையில் மாகாண சபைக்குரிய தேர்தலை விரைவாக நடத்தச் சொல்லக் கூடியவாரும் , அதற்கான முழு ஒத்துழைப்புகளையும் அதிகாரங்களையும் அமல்படுத்துவதற்கு இந்தியா மாண்புமிகு சிறிலங்கா அதிபரிடம் முன் வைக்க வேண்டும் என பகிரங்கமாக வேண்டுகோளை விடுக்கின்றேன்.'' என தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி, யாழ்ப்பாணம், Olten, Switzerland

02 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, உதயநகர் கிழக்கு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம், கொழும்பு

20 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, திருவையாறு, மகாறம்பைக்குளம்

31 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025