தங்காலை கடற்கரையில் நீராடிய இளைஞர்கள்: ஒருவர் உயிரிழப்பு:மற்றொருவர் மாயம்
Sri Lanka Police
Southern Province
Death
By Sindu
தங்காலை – உனாகூருவ கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த இரு இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மேலும் ஒரு இளைஞர் காணாமல் போயுள்ளார்.
உயிரிழந்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தேடும் பணிகள்
இவ்வாறு உயிரிழந்தவர் உனாகூருவ பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் எனவும், காணாமல் போயுள்ளவர் கிரிந்த பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

காணாமல் போன இளைஞனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நன்றி நவிலல்