ஓமான் கடற்பரப்பில் தாக்கப்பட்ட எண்ணெய்ப் தாங்கி கப்பல்...! அமெரிக்க முற்றுகையால் உச்சக்கட்ட பதற்றம்

United States of America Iran Middle East World Strait of Hormuz
By Shalini Balachandran Aug 01, 2026 09:26 AM GMT
Report

ஓமான் கடற்பரப்பில், ஹோர்முஸ் நீரிணையின் (Strait of Hormuz) நுழைவாயிலுக்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த எண்ணெய்ப் தாங்கி கப்பல் மீது அடையாளம் தெரியாத ஏவுகணை அல்லது எறிபொருள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியக் கடற்படையின் கடல்சார் வர்த்தகச் தொழிற்பாடுகள் பிரிவு (UKMTO) இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

ஓமானின் லிமா பகுதிக்கு வடகிழக்கே சுமார் 12 மைல் (20 கிலோமீற்றர்) தொலைவில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

ரணிலை புனிதராக்கிய ஈஸ்டர் தாக்குதல் விசாரணை...!

ரணிலை புனிதராக்கிய ஈஸ்டர் தாக்குதல் விசாரணை...!

கடுமையாகச் சேதம்

தாக்குதலில் கப்பலின் இயந்திர அறை (Engine Room) கடுமையாகச் சேதமடைந்துள்ளது.

தாக்குதலையடுத்துக் கப்பலைத் தன் கட்டுப்பாட்டில் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஓமான் கடற்பரப்பில் தாக்கப்பட்ட எண்ணெய்ப் தாங்கி கப்பல்...! அமெரிக்க முற்றுகையால் உச்சக்கட்ட பதற்றம் | Tanker Hit By Projectile Off Oman

அதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தில் பணியாளர்கள் எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்த விவரங்களை UKMTO அமைப்போ அல்லது அதிகாரிகளோ இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை.

மின்னல் தாக்கி வீடு தீப்பிடித்ததில் வீட்டு உபகரணங்கள் சிதைவு!

மின்னல் தாக்கி வீடு தீப்பிடித்ததில் வீட்டு உபகரணங்கள் சிதைவு!

ஹோர்முஸ் நீரிணை

இதனிடையே, சனிக்கிழமையன்றும் ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் மற்றொரு எண்ணெய்ப் தாங்கி கப்பலின் மாலுமி, கப்பலுக்கு அருகே கடலில் பெரிய வெடிப்புச் சத்தத்துடன் நீர் எழும்பியதைக் கண்டுள்ளதாக UKMTO பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும், இச்சம்பவத்தில் கப்பலுக்கோ அல்லது ஊழியர்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

ஓமான் கடற்பரப்பில் தாக்கப்பட்ட எண்ணெய்ப் தாங்கி கப்பல்...! அமெரிக்க முற்றுகையால் உச்சக்கட்ட பதற்றம் | Tanker Hit By Projectile Off Oman

இவ்விரு சம்பவங்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்தோடு அமெரிக்கா, ஈரானியத் துறைமுகங்களுக்கான கப்பல் போக்குவரத்திற்கு முற்றுமுழுதாகத் தடை மற்றும் முற்றுகை விதித்துள்ளதற்குப் பதிலடியாக, ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்தை முற்றாக முடக்கும் நடவடிக்கைகளை ஈரான் தீவிரப்படுத்தும் என ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்புக் சபையின் செயலாளர் முகமது பாகர் சோல்காத்ர் எச்சரித்திருந்தார்.

இந்தநிலையில் உலகின் மிக முக்கிய எண்ணெய் விநியோகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை வழியே சாதாரண நாட்களில் நாளொன்றுக்குச் சுமார் 130 கப்பல்கள் வரை பயணித்து வந்தன.

யாழ் சுதுமலை அம்மன் கோவிலில் அனுமதியற்ற திருப்பணிகள்...! நீதிமன்றின் அதிரடி உத்தரவு

யாழ் சுதுமலை அம்மன் கோவிலில் அனுமதியற்ற திருப்பணிகள்...! நீதிமன்றின் அதிரடி உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016