முல்லைத்தீவில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்ட மாமனிதர் தராகி சிவராமின் நினைவேந்தல்
ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராமின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று (28.04) மாலை உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.
முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவர் சண்முகம் தவசீலன் தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் திருவுருவப்படத்திற்கு மெழுவர்த்தி ஏத்தியும், மலர்தூபியும் அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.
ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராம் கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி காவல் நிலையத்திற்கு அருகில் வைத்து இனம் தெரியாதவர்களால் வெள்ளை வானில் கடத்தப்பட்ட பின்னர் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்
இந்நிலையில் அவரது சடலம் சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு அருகில் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







