பெண்களை இலக்கு வைத்து நடந்த தகாத செயற்பாடு : சிக்கிய தம்பதி
வேலைவாய்ப்பு வழங்குவதாக தெரிவித்து பெண்களை தமது வலைக்குள் வீழ்த்தி அவர்களை தகாதமுறைக்கு ஈடுபடுத்திய தம்பதி கைது செய்யப்பட்டனர்.
கடந்த நான்கு வருடங்களாக இந்த சம்பவம் இடம்பெற்று வந்துள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வேலை தேடும் பெண்களை இலக்கு வைத்து
வேலை தேடும் பெண்களை இலக்கு வைத்து இந்த தம்பதியினர் விளம்பரங்களை மேற்கொண்டு வந்துள்ளனர். பெண்களும் இந்த விளம்பரத்தை நம்பி குறித்த தம்பதியை நாடும்போது அவர்களை தகாத முறைக்கு உட்படுத்தி வந்துள்ளனர்.

இவ்வாறு வந்த பெண்ணொருவரை இந்த தம்பதியினர் அடைத்து வைத்து தகாத முறை செயற்பாட்டில் ஈடுபடுத்தி காணொளி எடுத்து பணத்திற்கு விற்றுள்ளதாக கூறப்படுகிறது.
சிக்கிய தம்பதி
அத்துடன் சில தினங்களுக்கு முன்னர், நுகேகொடையில் உள்ள இந்த வீட்டிற்கு வந்த பதுளை மற்றும் வெலேகெதர பிரதேசங்களை சேர்ந்த இரண்டு பெண்கள் அளித்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் நுகேகொடை சிறுவர் மற்றும் பெண்கள் குற்றத்தடுப்புப் பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |