கொழும்பில் இடம் பெற்ற கோர விபத்து: வெளியாகியுள்ள மரண விசாரணை அறிக்கை
புதிய இணைப்பு
கேகாலையில்(Kegalle) இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த யுவதியின் மரணம் தொடர்பில் மரண விசாரணை அறிக்கையை, அது தொடர்பான அதிகாரியான ரேணுகா சுபோதனி களுஆராச்சி நிஷங்க வெளியிட்டுள்ளார்.
உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனையை கேகாலை பொது வைத்தியசாலையின் உதவி சட்ட வைத்திய அதிகாரி கே.ஆர்.சுரங்க குலதுங்கவினால் மேற்கொள்ளப்பட்டது.
வழங்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் மருத்துவ அறிக்கையின் பிரகாரம், பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் தலை, மார்பு உட்பட பல காயங்களினால் ஏற்பட்ட தற்செயலான மரணம் என கேகாலை பிரதேச செயலகத்தின் மரண விசாரணை அதிகாரி ரேணுகா சுபோதனி களுஆராச்சி நிஷங்க தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் இறுதிக் கிரியைகள் இன்று ரம்புக்கனையில் நடைபெறவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
கேகாலையில் (Kegala) இடம்பெற்ற வாகன விபத்தில் 26 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்று (7.6.2024) கொழும்பில் (colombo) இருந்து கண்டி செல்லும் பிரதான வீதியில் கேகாலை - மங்களகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
லொறியின் சாரதி கைது
முச்சக்கர வண்டியொன்று எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் போது முச்சக்கரவண்டியில் மூவர் பயணித்துள்ளனர்,
விபத்தில் படுகாயமடைந்த யுவதி கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர்களின் பிரச்சினையை 1965இல் ஏற்றுக்கொண்ட டட்லி செல்வா ஒப்பந்தம்… 23 மணி நேரம் முன்