அதிரடிப்படையின் துப்பாக்கிச் சூடு! தேடப்பட்டுவந்த குற்றவாளி பலி
திட்டமிடப்பட்ட குற்றவியல் கும்பல் தலைவரான லலித் வசந்த என்பவர் பொலிஸ் விசேட அதிரடைப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் மீது ஆறு கொலைகள் உட்பட பல்வேறு குற்றவியல் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
சீதுவை, பேஸ்லைன் வீதியில் சந்தேகத்திற்கிடமான வாகனத்தை பொலிஸ் விசேட அதிரடைப் படையினர் பின் தொடர்ந்து சோதனை மேற்கொள்ள முயற்சித்த வேளையிலேயே இந்த துபாப்க்கிச் சூடு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளான லலித் வசந்த, நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சீதுவை நீதிவானின் மரண விசாரணையின் பின்னர், உயிரிழந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும்.