தேங்காய் எண்ணெய் இறக்குமதியில் பாரிய மோசடி - சாடும் எம்.பி.
சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் இறக்குமதி மூலம் சுமார் ஐயாயிரம் கோடி ரூபா வரி மோசடி செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் (S.M.Marikkar) குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் (Colombo) நேற்று (15.1.2025) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி 01ம் திகதியில் இருந்து ஒக்டோபர் 31 வரையான காலப்பகுதிக்குள் 38 ஆயிரம் தொன், சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
தேங்காய் எண்ணெய் இறக்குமதி
பொதுவாக ஒரு மெட்ரிக் தொன் சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் போது அதற்கு ஒரு லட்சத்த 25 ஆயிரம் ரூபா வரி விதிக்கப்படும்.
அதற்கு மேலதிகமாக வட் வரி, தேசியப் பாதுகாப்பு வரி என்பனவும் விதிக்கப்படும். ஆனால் கடந்த 2024 ஜனவரி 01 தொடக்கம் ஒக்டோபர் 31 வரை இறக்குமதி செய்யப்பட்ட சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய்க்கு இவ்வாறான வரிகள் விதிக்கப்படவில்லை.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) வேண்டுகோளின் பேரில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அது தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் காலத்திலும் தொடர்ந்துள்ளது. அதன் மூலம் சுமார் 5000 ஆயிரம் தொடக்கம் 6000 கோடி ரூபா வரையிலான வரி மோசடி செய்யப்பட்டுள்ளது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் குற்றம் சுமத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |