இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படவுள்ள நினைவுப் பரிசு

Mahinda Amaraweera Sri Lanka Tourism Sri Lanka Sri lanka tea
By Sathangani May 14, 2024 08:27 AM GMT
Report

இலங்கைக்கு வரும் ஒவ்வொரு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கும் விமான நிலையத்தில் இலங்கை தேயிலையை நினைவுப் பரிசாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) ஆலோசனை வழங்கினார்.

இதன்படி,  இலங்கை தேயிலையின் பெயரை உலகில் பிரபலப்படுத்தும் நோக்கில், இந்நாட்டிற்கு வரும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணிகளுக்கும் இலங்கை தேயிலை பொருட்கள் அடங்கிய நினைவுப் பரிசு வழங்கப்படவுள்ளது.

தேயிலை கைத்தொழிலை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் நேற்று (13) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த யோசனையை முன்வைத்தார்.

ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பான விசாரணை அறிக்கை: உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பான விசாரணை அறிக்கை: உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

விமான நிலையத்தில் இருந்து புறப்படும் பொழுது

இக்கலந்துரையாடலில் இலங்கை தேயிலை சபை, சிறிய தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை, தேயிலை தோட்டக்காரர்கள் சங்க பிரதிநிதிகள் மற்றும் தேயிலை தொழில்துறை பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படவுள்ள நினைவுப் பரிசு | Tea As A Souvenir For Tourists Coming To Sri Lanka

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பயணம் முடிந்து விமான நிலையத்தில் இருந்து புறப்படும் நேரத்தில் இந்த நினைவுப் பரிசு வழங்கப்படுவதுடன் தனியார் தேயிலை உற்பத்தியாளர்களும் தமது இணக்கத்தை வெளிப்படுத்தினர்.

அதன்படி, அரசு மற்றும் தனியார் துறையினரின் ஆதரவுடன் இந்த திட்டம் செயற்படுத்தப்பட உள்ளது. தேயிலை வாரியமும், தனியார் நிறுவனமும் இதற்கான செலவை ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக ஆரம்பிக்கப்படவிருக்கும் உயர்தர வகுப்புகள்: கிடைத்தது அமைச்சரவை அங்கீகாரம்

உடனடியாக ஆரம்பிக்கப்படவிருக்கும் உயர்தர வகுப்புகள்: கிடைத்தது அமைச்சரவை அங்கீகாரம்

தேநீர் அருந்துவதில் ஆர்வம்

இந்த நிலையில் தற்போது இலங்கைக்கு அதிகளவான சுற்றுலா பயணிகள் வருவதுடன், தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் தேயிலை தோட்டங்களை பார்வையிட அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இலங்கையிலும் தேநீர் அருந்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படவுள்ள நினைவுப் பரிசு | Tea As A Souvenir For Tourists Coming To Sri Lanka

இதன்காரணமாக சுற்றுலாப் பயணிகள் மத்தியில் எமது நாட்டின் தேயிலையின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த வேலைத்திட்டத்தை விரைவில் ஆரம்பிக்குமாறு  அமைச்சர் மகிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021