எதிர்க்கட்சித் தலைவரின் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி
Education
Sajith Premadasa
SJB
Teachers
Happy Teacher's Day
By Chanakyan
ஆயிரக்கணக்கான பிள்ளைகளின் எண்ணற்ற அபிலாஷைகளை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்படும் ஆசிரியர்களை நினைவுகூறும் உலக ஆசிரியர் தினம் இன்றாகும்.
இந்த வகையில் அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) இந்த பதிவினை வெளியிட்டுள்ளார்.
அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலேயே இந்தப் பதிவினை வெளியிட்டுள்ளார்.
நாட்டின் எதிர்கால தலைவிதியை நிர்ணயிக்கும் அனைத்து ஆசிரியர்களையும் நாம் கௌரவித்து வாழ்த்துக்களைத் தெரிவிப்போம் என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.