மீண்டும் போராட்டத்தில் குதிக்கவுள்ள ஆசிரியர்கள்
Strike Sri Lanka
Ceylon Teachers Service Union
Teachers
By Sumithiran
எதிர்வரும் திங்கட்கிழமை (22) முதல் இரண்டு வார கால தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்குக் காரணம் அரசாங்கம் இதுவரையில் தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வை வழங்காததேயாகும்.
சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
தொழிற்சங்கங்கள் கடும் நடவடிக்கை
அதற்கான தீர்வுகளை அரசாங்கம் வழங்காவிடின், இரண்டு வாரங்களின் பின்னர், தொழிற்சங்கங்கள் கடும் நடவடிக்கை எடுக்குமெனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கூட இரண்டு நாள் சுகவீன விடுமுறை போராட்டத்தை ஆசிரியர்கள் முன்னெடுத்திருந்த நிலையில் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக பெற்றோர் கவலை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
