வவுனியாவில் மாணவனை தாக்கிய ஆசிரியை! நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Sri Lanka Police Vavuniya Sri Lankan Schools
By pavan Apr 08, 2024 10:47 AM GMT
Report

வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் குறித்த பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியை கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 2 இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவன் கடந்த (03.04) அன்று பாடசாலை முடிந்து வீட்டிற்கு சென்ற நிலையில் மாணவனின் முகத்திலும், தலையிலும் அடிகாயங்கள் காணப்பட்டதை அடுத்து பெற்றோர் மாணவனிடம் விசாரித்ததில் அவரது ஆசிரியை தாக்கியதாக தெரிவித்துள்ளான்.

இதனை தொடர்ந்து சிறுவனின் தந்தை குறித்த ஆசிரியருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சிறுவனை தாக்கியதற்கான காரணம் என்ன மற்றும் காலிற்கு கீழ் அடித்து இருக்கலாமே என்றும் தெரிவித்துள்ளார்.

சஜித் பக்கம் தாவிய ராஜபக்சாக்களின் சகாக்கள்..! மொட்டு கட்சி அறிவிப்பு

சஜித் பக்கம் தாவிய ராஜபக்சாக்களின் சகாக்கள்..! மொட்டு கட்சி அறிவிப்பு

காவல்துறையினரிடம் முறைப்பாடு 

இதற்கு பதில் அளித்த ஆசிரியை 'உங்கள் மகனுக்கு அ, ஆ தெரியவில்லை என்றும் அதனாலேயே அடித்தது என்றும் அடிக்கும் போது சிறுவன் அங்கும் இங்கும் ஓடியதால் முகத்தில் அடிபட்டுவிட்டது என்று கூறியதுடன், மகனுக்கு அடிக்காமல் கொஞ்சுவதா என ஆசிரியர் கேட்டுள்ளார்.

கோபமடைந்த பெற்றோர் காயமடைந்த மாணவனை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை வழங்கியதுடன், காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்தனர்.

வவுனியாவில் மாணவனை தாக்கிய ஆசிரியை! நீதிமன்றம் வழங்கிய உத்தரவு | Teacher Who Assaulted A Student

இந்நிலையில் தாக்குதல் இடம்பெற்று நான்கு நாட்களின் பின் வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸார் நேற்று (07.04) குறித்த ஆசிரியரை கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த ஆசிரியரை நீதிமன்றில் காவல்துறையினர் முற்படுத்தினர். இதன்போது, குறித்த ஆசிரியர் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இச் சம்பவம் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழுவினர், மாவட்ட சிறுவர் பாதுகாப்பு பிரிவினர், வட மாகாண கல்வி திணைக்களத்தினர், வவுனியா வடக்கு கல்வி வலயத்தினர் ஆகியோரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025