ஆசிரியர் கல்லூரிக்கு செல்ல காத்திருப்போருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
ஆசிரியர் கல்லூரிக்கான இறுதிப் பரீட்சை (2022/2023/2025) இம்மாதம் 19 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை 04 பரீட்சை மையங்களல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பானது, புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகேவினால் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பரீட்சைக்கான விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் ஆசிரியர் கல்லூரிகளுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அனுமதி அட்டை
அத்துடன், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட்டு அனுமதி அட்டைகளைப் பதிவிறக்கம் செய்வதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த பரீட்சை தொடர்பான தகவல்களை பரீட்சைத் திணைக்களத்தின் பாடசாலை பரீட்சைகள் அமைப்பு மற்றும் பெறுபேற்று சபை கிளையிலிருந்து 011-2784208 அல்லது 011-24784537 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது 1911 என்ற ஹாட்லைனிலோ பெறலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
